தென் அமெரிக்காவைச் சேர்ந்த மின் விலாங்கு மீன்
விலாங்கு மீன் தென் அமெரிக்காவைச் சேர்ந்த மின்னாற்றல் மீனாகும். எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்காகவும், பிற உயிர்களை வேட்டையாடுவதற்காகவும் 500 வோல்ட் மின்சாரத்தையும், ஒரு ஆம்பியர் மின்னோட்ட திறனுள்ள மின் அதிர்வுகளையும் கொண்டு இருக்கிறது.
இந்த மீன் 2.5 மீட்டர் நீளமும், 20 கிலோ எடையும் கொண்டது. பெரும் பாலும் முதுகெலும்பற்ற உயிரிகளை உண்டு வாழும். இளம் மின் விலாங்கு கள் இறால், நண்டுகள் போன்றவற்றை உண்ணும். மற்ற மீன்களுடன் ஒப்பிடும்போது இந்த மின்விலாங்கு மீன்கள் வினோதமான இனப்பெருக்க முறையை கொண்டுள்ளன. வறண்ட பருவத்தில் ஆண் மீன் தன் உமிழ்நீரைக்கொண்டு கூடு கட்டும். அதில் பெண் மீன் முட்டையிடும். ஒரு கூட்டில் அதிகபட்சம் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் வரை பொரிக்கும். பெண் மீன்களை விட ஆண் மீன்கள் அளவில் பெரியவையாக வளரும்.
0
Leave a Reply