25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


நலம் வாழ

Jul 21, 2025

முளைகட்டியகொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால்...

வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு விதமான கொண்டைக்கடலையை அதிகம் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கருப்பு கொண்டைக்கடலையில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகமுள்ளது.முளைகட்டிய கொண்டைக்கடலையை சமைத்தோ அல்லது சமைக்காமலோ சாப்பிடலாம், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும். இதில் வைட்டமின் ஏ, பி6, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு கொண்டைக்கடலை சிறந்த உணவாகும். முளைக்கட்டிய கொண்டைக்கடலையை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது நல்லது.உடலின்வலிமையைஅதிகரிக்க,முளைகட்டியகொண்டைக்கடலையில் எலுமிச்சை, இஞ்சி, லேசான உப்பு, கருப்பு மிளகு சேர்த்து காலையில் காலை உணவாக சாப்பிட்டு வந்தால், நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும்.

Jul 19, 2025

உணவுப் பாதையில் ஏற்படும் ஆறாத புண்கள் அல்சர்.

உணவுப் பாதையில் ஏற்படும் ஆறாத புண்கள் தான் நாம் அல்சர் என்கிறோம். இவற்றை பெப்டிக் அல்சர் என்று அழைப்பார்கள். இவை புற்றுநோயாக மாறும் ..கேஸ்ட்ரிக் (or) இரைப்பையில் அல்சர் இரைப்பையில் அதிக அளவு அமிலத்தன்மை தேங்கி நிற்பதால் எந்த உணவு சாப்பிட்டாலும், உடனே மேலே வரும்; வயிற்று வலியுடன் இரத்தம் கலந்த வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்படும்; ஹெலிக்கோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா காரணமாக உண்டாகும். இந்த வகை வயிற்றுப்புண் புற்றுநோயாக மாறும் தன்மை கொண்டது.குடற் முதற்பகுதி ( or) டுயோடினம் அல்சர்குடலின் முதல் பகுதியை டுயோடினம் என்பார்கள். இதில் ஏற்படும் புண்களை  டுயோடினல் அல்சர் என்பார்கள்; இதில் வயிற்று வலி உணவு உண்ட பின் சரியாகும்; அதிக பசி ஏற்படும்; இதனால் உடல் எடை அதிகரிக்கும். அதிக ஆபத்து இல்லாத வகை இது.. அமிலத்தன்மை குறைக்கும் மருந்துகள் மருத்துவரின் ஆலோசனை படி எடுத்து கொண்டால் நல்லது.

Jul 16, 2025

கண் பார்வை சரியாக முருங்கைப்பூ

40 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது.இதனை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளெழுத்து மாறும்,கண்ணில் உண்டாகும் வெண்படலமும் மறைந்து கண் பார்வை சரியாகும்.முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். முருங்கைப் பூ அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

Jul 15, 2025

பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி தரும்.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு அலசர். மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும்.பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது. சாம்பார் சோறு வயிற்று பொருமலுக்கு மிகவும் நல்லது.

Jul 14, 2025

மஞ்சள் காமாலை.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து.அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்.

Jul 11, 2025

எளிதில் நோய் தெற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ள ,கோடை வெயிலின் தாக்கம் இனி நாளுக்கு நாள் அதிகரிக்கும் .

 என்னதான் வீட்டுல ஏசி பிரிட்ஜ் எல்லாம் வச்சி இருந்தாலும் ஒரு ஓரமா மண் பானையில் தண்ணி புடிச்சி வச்சி குடிங்க!அம்மை போன்ற உடல் உஷ்ண  நேய்களை எதிர்கொள்ள மண் பானை தண்ணீரில் சிறிது வேம்பு கொழுந்து இலைகளை பறித்து போட்டு குடியுங்கள்.பப்பாளி இலைகளை அரைத்து கை,கால் குடைச்சலுக்கு பற்று போட்டு, வெந்நீரில் கழுவி வர வலி குறையும், 2.மாம்பழ துண்டுடன் தேன், குங்குமப்பூ, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், பால் ஆகியவை சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்

Jul 08, 2025

தாய்ப்பால் நன்றாக சுரக்க....

 பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம் குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுவர, பால் அதிகம் சுரக்கும் குழந்தையும் கொழு கொழுவென  ஆகும். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்தால் தாய்பால் பெருகும்.

Jul 05, 2025

உடல் வெப்பத்தைத் தணிக்கும் கற்றாழை ஜூஸ்.

கற்றாழை ஜூஸ் குடித்தால் உடல் வெப்பம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்தாரை எரிச்சல் நீங்கும் .மாதவிடாய் கோளாறுகள், உடல் காந்தல் போன்ற பாதிப்புகள் குறைய உதவும். கண்களில் எரிச்சலைப் போக்கும் .வயிற்றுப்புண் ஆற உதவும், வயிற்றின் எரிச்சலை சரிசெய்யும். வெயிலில் இருந்தும் மூல நோயில் இருந்தும் நம்மைக் காக்கும் மலச்சிக்கல் நீங்க உதவும்.

Jul 04, 2025

துவரம்பருப்பு துவையல்.

துவரம்பருப்பை லேசாக வறுத்து, துவையலாக செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால், செரிமான சக்தி அதிகரித்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவதுடன் , சிறுநீரகப் பாதைத் தொற்றுகளை நீக்கும் வல்லமை, துவரைக்கு உண்டு. துவரம்பருப்பிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்குவதுடன் ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

Jul 02, 2025

இரத்தசோகை பிரச்சினை சரியாக....

உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினமும் 2-3 அத்திப்பழத்தை சாப்பிட்டுவந்தால் கடும் பித்தம் வியர்வை வழியாக வெளியாகிவிடும். இரவில் 3-5 பழம் வரை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீரை குடித்துவிட்டு, இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இரத்தசோகை பிரச்சினை சரியாகும்கருப்பு காய்ந்த திராட்சை மூன்றை இரவே ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் பழத்தை சாப்பிட்டு தண்ணீரை குடித்து வந்தால் ரத்தம் உற்பத்தியாகும்.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 44 45

AD's