எலும்புகள் பலவீனமாகும்.பல் வலி, பற்கள் விழுதல் ஏற்படலாம்.கை, கால் வலிகள் அதிகரிக்கும்.கால்களில் திடீர் பிடிப்பு (கிராம்ப்ஸ்) வரும்.நகங்கள் எளிதில் உடையும்.முடி உதிர்வு அல்லது நரம்புகள் பலவீனமாகும்.இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாக மாறலாம்.அதிக சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும்.தூக்கப் பிரச்சனைகள் ஏற்படலாம்.கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் ஆஸ்டியோபோரோசிஸுக்கு வழிவகுக்கும், எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற அபாயத்தை அதிகரிக்கும். மேலும், தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க, நார்ச்சத்து நிறைந்த (கீரை, சுவிஸ் சார்ட்), பெர்ரிகள், முழு தானியங்கள் (ஓட்ஸ்), பாகற்காய், கொட்டைகள் மற்றும் விதைகள், மெலிந்த புரதங்கள் (முட்டை, மீன்) மற்றும் யோகர்ட்** போன்ற உணவுகளை உண்ணலாம், இவை இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி, அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். கீரை, கேல், ப்ரோக்கோலி போன்ற இலைக்கறிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பாகற்காய் சாறு வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தும். மேலும் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும். இதில் அதிகமுள்ள வைட்டமின் ஏ கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.இந்த உணவுகள் அனைத்தும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (Low Glycemic Index) கொண்டவை, அதாவது அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்துவதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான தேர்வுகளாகும்.
கல்லீரல் கொழுப்பு பிரச்சனை இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் எளிதில் உடல் சோர்வு அடையும், வயிற்றின் வலது பக்கத்தில் வலி அல்லது அதிக பாரம் இருப்பது போன்ற உணர்வு, அடிக்கடி செரிமான கோளாறு ஏற்படும். வாயில் அடிக்கடி கசப்பு போன்ற உணர்வு ஏற்படுதல், திடீர் உடல் எடை அதிகரித்தல் அல்லது குறைதல், ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடும்.கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அது கல்லீரல் திரிபு அல்லது மோசமான நச்சுத்தன்மையை குறிக்கலாம்.கல்லீரல் நோய் புரதங்களை உருவாக்கும் கல்லீரல் திறனை பாதிக்கலாம். இது இரத்த ஓட்டம் மற்றும் திரவத்தை அகற்றும் செயல்பாட்டை பாதிக்கலாம்.கொழுப்பு கல்லீரல் நோயின் தீவிர நிகழ்வுகளில் கல்லீரல் சரியாக செயல்படாது.இந்த பிரச்சனை உள்ளவர்கள் உணவில் நெல்லிக்காய், பூண்டு, மஞ்சள், கீரைகள், வெள்ளை பூசணி ,சுரைக்காய், புடலங்காய், எலுமிச்சை சாறு, சிறுதானியங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1. வாழைப்பழம்2. திராட்சை3. பூண்டு4. புடலங்காய்5.தர்பூசணி6.இளநீர்7. மாதுளை8. கொத்தமல்லி9. எலுமிச்சை10. தக்காளி11.செலரி12. புதினா இந்த காய்கனிகள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
சளி வாட்டி வதைக்கும் போது அதில் இருந்து வெளியேற, சிம்பிளான கஷாயம் மூலம் சளியை கரைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 கிளாஸ் தண்ணீரில், கிராம்பு -3.மிளகு -3. சுக்குப் பொடி - கால் ஸ்பூன், மஞ்சள் பொடி - 2 சிட்டிகை, பிளாக் சால்ட் - 2 சிட்டிகை, நா.சர்க்கரை - 1 ஸ்பூன் ஆகியவை போட்டு கொதிக்கவிடுங்கள். அது 1. டம்ளராக சுண்டினால் கஷாயம் ரெடி.
சிறுநீரக செயலிழப்பு வர காரணம் என்னவென்றால் நாள்பட்ட நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், நீண்ட கால சிறுநீரக வீக்கம், உப்பு அதிகம் உட்கொள்ளுதல், தினமும் ஊறுகாய் உட்கொள்ளுதல், அதிக அளவில் மது அருந்துதல், மருத்துவரின் ஆலோசனையின்றி அதிக அளவு மருந்துகளை பயன்படுத்துதல், சிறுநீரகத்திற்கு செல்லும் குருதி குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்படுதலே ஆகும்.அடிக்கடி சிறுநீர் கழித்தல். கண்கள் மற்றும் கால்களில் வீக்கம்.சிறுநீரில் அதிகப்படியான நுரை.இடுப்புக்குக் கீழே வலியும் ஒரு அறிகுறியாகும். சாப்பிட்ட உடனேயே வாந்தி எடுப்பது போல் உணருதல்.
உடல் எடை குறைப்பு, செரிமான பிரச்சனை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது போன்றவற்றுக்கு டிராகன் பழம் நல்ல மருந்து.உடல்சோர்வாக இருக்கும்போதும், அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில் மாற்றங்கள் ஏற்படும் போதும், இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.இதய நோய், புற்றுநோய் போன்றவை வருவதை தடுக்கிறது.அதில் உள்ள இரும்புச்சத்து (Iron) மற்றும் வைட்டமின் சி (Vitamin C) ஆற்றலை அதிகரித்து, சோர்வைப் போக்க உதவுகின்றன; கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates) உடனடி ஆற்றல் அளிக்கும். நார்ச்சத்து (Fiber) செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்புக்கும் நல்லது.
முருங்கைக் கீரையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சில நாட்களுக்கு சூப்பு போல குடிங்க. ருசிக்கு மிளகு சீரக தூள் கொஞ்சம் போட்டுக்கலாம். கழுத்து வலி மூட்டுவலி நிரந்தரமாக குணமாகும். சர்க்கரை வியாதி, சளி, ஆஸ்துமா, இரத்தசோகை (இஹீமோகுளோபின்). உடல்சூடு, மலச்சிக்கல், ஆண் பெண் மலட்டுத்தன்மை, தலைமுடி வளர்ச்சியின்மை, நரைமுடி, அல்சர், வாய்ப்புண், பற்கள் உறுதியின்மை, தலைவலி, தாய்பால் சுரப்பின்மை இதெல்லாம் கூட குணமாகிவிடும்.
தினமும் காலை 30 நிமிடம் நடந்தா ரத்த ஓட்டம் சீராகும்.வெறும் வயிற்றில் 2 கப் சூடான தண்ணீர் குடிக்கவும் - டிடாக்ஸ் ஆகும்.ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகை பழமும் 3 வகை காய்கறியும் சாப்பிடவும்.வாரத்தில் 2 நாள் சிறுதானியம் சேர்க்கவும் - உடல் எடை சர்க்கரை கட்டுப்பாடு.7-8 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.தினசரி ஒரு கைப்பிடி (10gm) பாதாம், வால்நட் நிலக்கடலை மாதிரி நட்ஸ் சாப்பிடவும்.யோகா/ப்ராணாயாமா 15 நிமிடம் செய்யவும் மன அழுத்தம் குறையும்.மொபைல், டிவி குறைத்து குடும்பத்தோட நேரம் செலவிடவும் மன அமைதி வரும்.
எலுமிச்சையை மணப்பது குமட்டல் வாந்தி எடுக்கும் உந்துதலை கட்டுப்படுத்த உதவுகிறது.ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு வைப்பது, இரத்த அழுத்தத்தைக் குறைத்து இருமலைக் கட்டுப்படுத்துகிறது.டீ யில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது, சீக்கிரம் வயதான தோற்றத்தை தடுத்து, இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்துகிறது.தொண்டைப்புண் போக்க சிறிய துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுவது உதவும்.காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த தண்ணீர்க் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.