சப்பாத்தி ஆம்லெட்
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு 2 கப் , ,முட்டை 4, பெரிய வெங்காயம்3,தக்காளி 2 .,பட்டாணி 1 கப், கேரட் 2,பச்சை மிளகாய் 2,உருளைக்கிழங்கு.2,சிறிய மில்மேக்கர் 1 கப்,மிளகாய் தூள் தேவையான அளவு,மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் ,உப்பு தேவையான அளவு,கறிமசாலா தூள்2 டீஸ்பூன் ,டோமேட்டோ சாஸ்,மைனஸ்,இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்.
செய்முறை :
சப்பாத்தி மாவு பிசைந்து அதை வட்டமாக திரட்டி கொள்ளவும்.ஒருபுறம் கல்லில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பிறகு பட்டாணி ,கேரட் ,உருளைக்கிழங்கு மில்மேக்கர் ,ஆகியவற்றை சேர்த்து, வதக்கி மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,கறிமசாலா தூள், சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்து வேக வைக்கவும்.
முட்டையை உடைத்து கலக்கி அதில் வேக வைத்த கலவையை ஊற்றி கலந்துசப்பாத்தியில் வேக வைத்த பக்கம் தடவி சிறிதாக எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான சப்பாத்தி ஆம்லெட் ரெடி.
0
Leave a Reply