25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நலம் வாழ

Sep 08, 2025

உடல் எடை குறைய கருப்பு கவணி அரிசி கஞ்சி.

எட்டு மணி நேரம் ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை கழுவி வடித்து மிக்ஸியில் பொடிக்கவும் ஒரு கிளாஸ் அரிசிக்கு மூன்று கிளாஸ் தண்ணீர்விட்டு இதனுடன், சின்ன வெங்காயம் அரிந்தது. பச்சை மிளகாய், பூண்டு சீரகம், மிளகு கொத்தமல்லி கருவேப்பிலை, உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து மூன்று விசில் விடவும். பின் இறக்கி ஆற வைத்த கஞ்சியோடு தேங்காய் பால்  எடுத்து ஊற்றி கலந்து பரிமாறவும்.வாரம் இரு முறை குடித்து வரும்போது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் புற்று நோய்க்கும் உடல் எடை குறையவும் சர்க்கரை நோயை கட்டுப்படுக்கவும் உதவியாக இருக்கிறது.

Sep 06, 2025

எலும்புகள் பலம் பெற....

கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளில் பால் முதலிடத்தை பிடிக்கிறது. 1 கிளாஸ் பாலில் 300 கிராம் கால்சியம் சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.முட்டைகோஸில் கால்சியம் சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில்  தாதுக்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்புச்சத்து அதிக இருப்பதால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.ப்ரோக்கோலி தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் எலும்புகள் வலுப்படும். இதில் இருக்கும் வைட்டமின்K சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில்கால்சியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. கீரைகள் உடலுக்கு தேவையான 25%கால்சியம் சத்துக்களை தருகிறது. இதில் நார்சத்து, வைட்டமின்A மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் இது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும் எலும்புகள் உறுதியாக வலுவாக இருக்க பப்பாளி பீன்ஸ் பிரண்டை ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

Sep 03, 2025

இருமல், சளி குணமாக அதிமதுரம்

அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும், அதிமதுர பொடியை2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

Aug 29, 2025

குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் !

குளிர்ந்த நீரை அப்படியே தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி. இறுதியாக தலையில் ஊற்ற வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிலிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியே செல்லும். குளிப்பதற்கு சுடு நீரை விடபச்சை தண்ணீர் தான் மிகவும் சிறந்தது.

Aug 27, 2025

எலும்பு தேய்மானம் மூட்டுவலி குணமாக ….

எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலியைக்' குணப்படுத்த, மூட்டு வலியைக் குறைக்க, ஒரு வாழைப்பழத்தை * நசுக்கி பிழிந்து, சாற்றில் கால் பங்கு உப்பு மற்றும் கால் பங்கு புளி சேர்த்து கொதிக்க வைத்து, வலி உள்ள இடத்தில் வெதுவெதுப்பான நீரில் தடவவும். மூட்டு வலி குறையும்.

Aug 26, 2025

காலையில்வெந்நீர் பருகினால்....

உணவின் எச்சங்களையும், உடல் நச்சுகளையும் வெளியேற்றி. செரிமானத்தை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்; கொழுப்பை கரைக்கும். உடலின் அமில கார சமநிலையை (பி.எச்) பராமரிக்க உதவும். நீர்ச்சத்தை தக்கவைப்பதால் சரும செல்களை பாதுகாக்கும். எலுமிச்சை சாறு கலந்து பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

Aug 26, 2025

மண் பானையில் தண்ணி புடிச்சி வச்சி குடிங்க...

அம்மை போன்ற உடல் உஷ்ன நேய்களை எதிர்கொள்ள மண்பானை தண்ணீரில் சிறிது வேம்பு கொழுந்து இலைகளை பறித்து போட்டு குடியுங்கள்..என்னதான் வீட்டுல ஏசி பிரிட்ஜ் எல்லாம் வச்சி இருந்தாலும் ஒரு ஓரமா மண் பானையில் தண்ணி புடிச்சி வச்சி குடிங்க…

Aug 25, 2025

நரம்பு தளர்ச்சி நீங்க கருப்பு உலர் திராட்சை

தினமும்7 கருப்பு உலர் திராட்சையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தி விட்டு, பின்னர் உலர் திராட்சை பழத்தையும் சாப்பிடுங்கள், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைய உதவும், சிறுநீரக நோய்கள் குணமாகும் .கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், காலையில் உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, இரத்த சோகையை தூர விரட்டும், மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும். மேலும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

Aug 22, 2025

உடலுக்கு வலிமையை தரும் திரிபலா பொடி

கண்களை ஆரோக்கியமாகவும், பார்வையை தெளிவாக வைக்க உதவுகிறது.ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கிறது.உடலுக்கு வலிமையை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. அஜீரணம், வாயுத்தொல்லை பிரச்சனைகளை சரி செய்கிறது.திரிபலா பொடி சருமப் பிரச்சனைகளை சரி செய்கிறது. தொடந்து எடுத்துக் கொள்வதால் பொலிவை ஏற்படுத்தும் மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.எந்தவொரு மூலிகையையும் தகுந்த மருத்துவரின் பரிந்துரை படி எடுக்கவேண்டும்.

Aug 21, 2025

செரிமானத்திற்கு உதவும் கருவேப்பிலை.

தினமும்3,4 கருவேப்பிலை, அதிகாலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால்கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். மாலைக்கண் நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோயை குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.மேலும் செரிமானத்திற்கும் கருவேப்பில்லை உதவியாக இருக்கும். மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு உப்புதல் ஆகியவற்றை இது நீக்கும். இதில் ஆண்டிபயாடிக் தன்மைகள் காணப்படுவதால், தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது.கறிவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம்.கறிவேப்பிலை இலைகளை கொதிக்க வைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, உச்சந்தலையில் தடவவும்.குறைந்தது15 முதல்20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கவும்.

1 2 ... 15 16 17 18 19 20 21 ... 48 49

AD's



More News