பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தின் 200-வது நாள் விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் (08.03.2025) பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தின் 200-வது நாள் விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தின் நகரின் உடைய வடக்கு பகுதியில் இருக்கக்கூடியவர்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள். அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் இருக்காது. அதே நேரத்தில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது.எனவே, எந்த ஒரு வளர்ச்சியும் சமநிலையோடு, நீடித்த நிலையான அனைத்து தரப்பு வளர்ச்சியும் உள்ளடக்கிய ஒரு முயற்சியாக தான் இருக்கவேண்டும்.புதிய பேருந்து நிலையமானது அரசு அதிகாரத்தின் மூலமாக இயங்க வைக்கக்கூடாது. அது பொதுமக்களின் ஆதரவோடு தான் வரவேண்டும்.
இந்த பேருந்து நிலையம் சரியாக செயல்பட வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக 20 கூட்டங்கள் நடத்தப்பட்டு,அதற்கான சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பொதுமக்களே பேசி அதனை சரிசெய்தார்கள்.அமைச்சர் பெருமக்கள் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள்கள் உள்ளிட்டோர்களின் பேச்சுவார்த்தை மற்றும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த பேருந்து நிலையம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட்டது.
அதற்கு பின்பும் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதனுடைய நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
எனவே, ஒவ்வொரு செயலும் பொதுமக்களுடன் இணைந்து மக்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் அவர்களின் எந்த நலனையும் பாதிக்காத வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டு அனைவரும் இணைந்து மிகவும் சிறப்பாக 200 நாள் வந்திருக்கிறது.
இந்த பேருந்து நிலையத்தில் கடைகள் பொதுமக்களுக்கு தேவைப்படுவதால் அதிகமான கடைகள் கொண்டு வர வேண்டும். மேலும், பேருந்து நிலையம் ஆரம்பித்த பிறகு இந்த நகரின் உடைய தெற்கு பகுதி நிறைய வளர்ச்சியை பெற வேண்டும். விருதுநகர் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க நகராட்சியாக மாற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.மாதவன், போக்குவரத்து அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply