25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நூறாண்டுகளை கடந்த அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவினை கொண்டாடிய 31-அரசுப் பள்ளிகளை சேர்ந்த  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்களை அவர்கள் வழங்கினார்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நூறாண்டுகளை கடந்த அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவினை கொண்டாடிய 31-அரசுப் பள்ளிகளை சேர்ந்த  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்களை அவர்கள் வழங்கினார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (15.09.2025) பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் ஈட்டும் பெற்றோர்கள் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு கல்வி பராமரிப்பு செலவினத்திற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 105-பள்ளி மாணவர்களுக்கு ரூ.76 இலட்சத்துக்கான வைப்பு நிதிக்கான பத்திரங்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.

 மேலும், விருதுநகர் மாவட்டத்தில் நூறாண்டுகளை கடந்த அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவினை கொண்டாடிய 31-அரசுப் பள்ளிகளை சேர்ந்த  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்களை  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.அதன்படி,  விபத்து காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் அல்லது நிரந்தர முடக்கம் காரணமாக வருவாய் ஈட்ட இயலாத பெற்றோரின் குழந்தைகளுக்கு அவர்களின் கல்வியினை இடைநிற்றல் இன்றி தொடர்வதையே முதன்மை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 அதனடிப்படையில்,  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களில், பெற்றோரை இழந்த அல்லது நிரந்த முடக்கம் அடைந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் அனுமதி அளிக்கப்பட்டு, அந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வழங்கப்படுகிறது.மேலும், அம்மாணவ/மாணவியர்களின் தங்களின் கல்வியினை, வைப்புத் தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்தும்,  முதிர்வுத் தொகையிலிருந்தும் தொடரும் வண்ணம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில்,  விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தொடக்கக்கல்வி பயிலும் 33 மாணவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதமும், பள்ளிக்கல்வி பயிலும் 11 மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதமும் மற்றும் 61 மாணவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதமும் என மொத்தம் 105 மாணவர்களுக்கு ரூ.76 இலட்சத்துக்கான வைப்பு நிதிக்கான பத்திரங்கள்  வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகள் சிறப்பினையும், கல்விக்கு அரசுப் பள்ளிகள் ஆற்றிய பங்களிப்பினை கொண்டாடும் வகையில்  “நூற்றாண்டு திருவிழா” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 அதனடிப்படையில், இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் நூறாண்டுகளை கடந்த அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவினை கொண்டாடிய 24 அரசு தொடக்கப் பள்ளிகள், 5-அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 02-அரசு மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 31-அரசுப் பள்ளிகளை சேர்ந்த  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன்,  திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல்,  முதன்மை கல்வி அலுவலர்திரு. மதன்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *