25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


‘சமூக நீதி நாள்” உறுதிமொழியினை  அமைச்சர்கள்  தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘சமூக நீதி நாள்” உறுதிமொழியினை அமைச்சர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பொியார் பிறந்த நாளான  (17.09.2025) ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள்  ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்   நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்  தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக, தந்தை பொியார் அவர்களின் 147 ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது  படத்திற்கு  மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர், சிவகாசி மாநகராட்சி மேயர், அரசு உயர் அலுவலர்கள்  உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழக சட்டபேரவையில்  தமிழக முதலமைச்சர் அவர்கள் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ம் தேதி ஆண்டுதோறும்  ‘சமூக நீதி நாளாக“ கொண்டாடப்படும் என அறிவித்தார்.அதன்படி,  சாதி ஏற்றதாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறி தள்ளி பெண்களை சம நிலையில் மதித்திடும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17-ம் நாள் ஆண்டுதோறும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டுமென அரசின் ஆணையின்படி,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்
எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்

சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப்
 பார்வையும் கொண்டவையாக என்னுடைய
செயல்பாடுகள் அமையும்.

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய
கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக்
கொள்வேன்.

மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும்
 போற்றுவேன்.

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட
இந்த நாளில் உறுதியேற்கிறேன்”.

என்ற உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்  ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News