25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 11, 2025

விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில், (10.09.2025) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “ வாசித்ததும் யோசித்ததும் ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.இதன் 100-வது நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 11, 2025

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அரசு சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் (10.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், கூரைக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர் சந்தையில்   இலங்கை தமிழர்  மறு வாழ்வு முகாமில் ரூ.14.06 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 244 குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு குடியிருப்பு வீடுகளின் தரம் குறித்தும் மின்சாரம் சாலை குடிநீர் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு  வசதிகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Sep 11, 2025

அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும்  மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,, அவர்கள் (10.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரியில்,  வேளாண்மைத்துறையில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு 70 சதவீத மானியத்தில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நோில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பயனாளியுடன்  கலந்துரையாடினார்.மேலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரியில்,வேளாண்மை பொறியில் துறையின் சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, வில்லிபத்திரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் சார்பில் மாநில தோட்டகலை வளர்ச்சித் திட்டம் தென்னை பரப்பு விரிவாக்கம் மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள 48 தென்னை கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அழகிய நல்லூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ள சப்போட்டா பழமரக்கன்றுகளையும், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும், அழகிய நல்லூர் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட தேனீ பெட்டிகள் மற்றும் தேன் எடுக்கும் கருவியினையும், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மானியத்தில் வழங்கப்பட்டுள்ள தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கை மற்றும் கால்நடைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,)திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ)திருமதி சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி, செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 11, 2025

தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்சார்ந்தவர்களுக்குஜெர்மன் மொழி தேர்வுக்கானபயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலானபயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழித் தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training)அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சினைபெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மற்றும் பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing),பொதுநர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ (GNM Diploma), பி.இ(மெக்கானிக்கல்இன்ஜினியரிங்), பி.இ (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ (மின் மற்றும் மின்னணுபொறியியல் (EEE)) & பி.டெக்.தகவல் தொழில்நுட்பம் (B.Tech IT)ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும்வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்பதுமாதமும் விடுதியில்தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சிமுடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில்பணிபுரியவும்ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.2,50,000/- முதல் ரூ.3,00,000/-வரைவருவாய் ஈட்டவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.இப்பயிற்சியில்சேருவதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளமுகவரியில்பதிவு செய்ய வேண்டும். தகுதியுடையவிண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினைபயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 10, 2025

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்(09.09.2025)நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.09 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், முத்துசாமிபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.13.30 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, குளிரூட்டும் நிலையம், பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் பணிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், வடக்கு மலையடிபட்டியில் (09.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம்,  ஆமத்தூாில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நோில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் (09.09.2025) இராஜபாளையம் நகராட்சி, வடக்கு மலையடிப்பட்டி, விருதுநகர் வட்டம், ஆமத்தூர், சாத்தூர் வட்டம், முள்ளிச்செவல், வெம்பக்கோட்டை வட்டம், வெம்பக்கோட்டை, சிவகாசி (மாநகராட்சி) மாலையம்மன் திருமணமஹால், சுந்தரப்பாண்டியம் (பேரூராட்சி) சாலியர் சமுதாய திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.அதன்படி,இராஜபாளைம் வட்டம், வடக்கு மலையடிப்பட்டி மற்றும் விருதுநகர் வட்டம் ஆமத்தூர் ஆகிய  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இம்முகாமில், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை நகலினையும், பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள  முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து  தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில், சீர்மரபினர் நல வாரியத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, இராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் திருமதி பவித்ரா ஷ்யாம், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2025

விருதுநகர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் பெண்கள் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (09.09.2025) தொடங்கி வைத்து உரையாற்றினார்.பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக கிடைக்கிறது. உங்களுடைய கல்வி வாய்ப்புகளாக இருக்கட்டும், வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவற்றையெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கென்று அதிகமான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது.தமிழ்நாடு அரசின் மூலம் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம், பள்ளி, கல்லூரி பயில்வதற்கான திட்டங்கள் மற்றும் சலுகைகள், பெண்கள் உயர்கல்வியை ஊக்குவிக்க புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அந்த வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2025

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஒன்றிய அரசின் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.09.2025) வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஒன்றிய அரசின் இணை செயலாளர்(பயிர்கள்) திருமதி இனித்தா அவர்கள் மற்றும் கூடுதல் ஆணையர்(தோட்டக்கலைத்துறை) முனைவர் என்.கே.பட்லா அவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில், 2024-2025 நிதியாண்டில் செயல்படுத்தப்பட்ட மத்திய திட்டங்கள் குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய திட்டங்கள் செயல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், பயிர் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்துவதற்கும், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.இக்கூட்டத்தில்,இணைஇயக்குநர்(தரக்கட்டுப்பாடு)முனைவர்சுபாஷ்குமார்,கூடுதல்இயக்குநர்கள்திரு.ராம்பிரசாத்(தோட்டக்கலைத்துறை), திரு.சங்கர் சுப்பிரமணியம்(வேளாண்மைத்துறை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) திருமதி சுமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 10, 2025

இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினமான 11.09.2025 அன்று, பரமக்குடி வழித்தடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், விற்பனை ஏதும் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு.

விருதுநகர் மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு இமானுவேல் சேகரன் நினைவு தினமான 11.09.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்தும் தினத்தன்று இணைப்பில் கண்ட, டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 உரிமஸ்தலங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்கள் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது.2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி 11.09.2025 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3  மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது 1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 09, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிப் பயணம்- 2025 செல்லும் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (08.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிடும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிப் பயணம்- 2025 செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, விருதுநகர் மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில், தற்போது 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், தேர்ச்சிபெற்று அடுத்த கல்வியாண்டில் 100 சதவீதம் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை ஊக்குவிப்பதற்காக களப்பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 41 அரசுப்பள்ளிகளில் பயிலும் 2,287 மாணவ, மாணவிகள் அவரவர்கள் பள்ளிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன்படி,  விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 43 மாணவிகளுடன் களப்பயணம் சென்ற பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.இந்த பயணத்தின் போது, கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், அடிப்படை கட்டமைப்புகள், வசதிகள், படித்து முடிக்கும் போது கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்த பயணம் எங்களுக்கு ஒரு ஆர்வத்தையும், உயர்கல்வி குறித்த புரிதலையும் அளித்ததோடு, உயர்கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் அறிந்து கொண்டோம். இதன் மூலம் உயர்கல்விக்கு நாங்கள் முன்கூட்டியே எங்களை தயார் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது எனவும், இதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை பள்ளி மாணவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.பின்னர், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும், மாணவிகளுடன் கலந்துரையாடி கற்றல் திறன் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மதன்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 49 50 51 52 53 54 55 ... 121 122

AD's



More News