விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் (08.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பேர்நாயக்கன்பட்டி ஊராட்சியில் (08.09.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி - II/IIA (குரூப் II/IIA) தேர்வு வரும் 28.09.2025 அன்று நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 13.09.2025, 20.09.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/Hh95p3dpncM6artk7 என்ற GOOGLE FORM -ஐ பூர்த்தி செய்து , தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10 மணிக்கு விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரிக்கு நேரில் வருகை புரிந்து மாதிரித் தேர்வினை எழுதி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மின்னஞ்சல் முகவரியான studycirclevnr@gmail.com அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில் நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட்போர்டு வடிவமைப்பு பயிற்சி (PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) அளிக்கப்படவுள்ளது . தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program ) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு ,சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பபயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying ) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி(Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட்போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program) மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்(Core Tech Placement program) போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma)தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.மேற் கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம்ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.comபதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், அமலா உயர்நிலைப் பள்ளியில் (06.09.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது 02.08.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில் குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, இன்று காரியாபட்டி வட்டம், அமலா உயர்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (06.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் ரூ.230.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்பு வீடுகளில் பணிகளின் தரம் குறித்தும், ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சமூக நிதி விடுதியில் பயிலும் மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு, உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தங்கு விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்கள் சேதுபதி அரசு மேநிலைப் பள்ளியில் தான் படிக்கிறார்களா என்பது பற்றி உறுதி தன்மையினை ஆராய்து, மேலும், காப்பகத்தின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் வசதி, எண்ணிக்கை, மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஜோகில்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் (06.09.2025) நடைபெற்ற சிறப்பு காபி வித் கலெக்டர் (Coffee With Collector) என்ற 208- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை ஊக்கு விக்கும் விதமாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்- 1 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் திரு.சுபாஷ் என்பவர் மற்றும் போட்டி தேர்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,.I A S, அவர்கள் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், கோட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் 745 /400 கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது முழுமை பெற்றதை தொடர்ந்து, அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன்,I A S., அவர்கள் (06.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாட்டில் தொழிற்துறை, விவசாயம், நகர்புற மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்றவாறு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க செய்யும் நோக்குடன், தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் திறனை மேம்படுத்தும் விதமாக கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரம் வழங்குதல் போன்ற பணிகளை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், சாத்தூர் வட்டம், கோட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் 745 /400 கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.இந்த துணை மின் நிலையத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையிலும், அதன் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர்/தமிழ்நாடு மின் வாரிய நிறுவன தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில், திருநெல்வேலி மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் திருமதி சந்திரா, மேற்பார்வை பொறியாளர் (பாதுகாப்பு மற்றும் தொலை தொடர்பு, மதுரை) திரு.சந்திரசேகர், மேற்பார்வை பொறியாளர்(பொது பகிர்மான வட்டம், மதுரை) திருமதி பிரேமலதா, மேற்பார்வை பொறியாளர் (விருதுநகர் மின் பகிர்மான வட்டம்) திருமதி லதா, மேற்பார்வை பொறியாளர்(இயக்கம், திருநெல்வேலி) திருமதி ஷீபாரெஜி, மேற்பார்வை பொறியாளர்(மரபு சாரா எரிசக்தி, திருநெல்வேலி(பொ)) திரு.ராஜசேகர் மற்றும் மின்வாரிய பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04.09.2025) தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் சார்ந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தொடங்கி வைத்து, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்.தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்துவதற்காக புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு(IEDP)திட்டத்தை 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான சட்டசபை அறிவிப்பில், இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்க “நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை(TNYIEDP) அறிவித்தார். அதன்படி இத்திட்டம் 16.07.2025 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நிமிர்ந்து நில் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.இத்திட்டத்தின் நோக்கம் 5 ஆண்டுகளில் 10,000 மாணவர்களை தொழில்முனைவோர்களாக (Student Entrepreneurs) உருவாக்குவது, அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்பத்திறன் வளர்ப்பு, செயற்கை நுண்ணறிவு, இ-காமர்ஸ் மற்றும் உற்பத்தித் துறை போன்ற துறைகளில் பயிற்சி அளிப்பது ஆகும். இத்திட்டத்தின் கீழ் ரூ.19.57 கோடி மாணவர் தொழில்முனைவோர்களுக்கும், ரூ.2 கோடி அடுக்கு-1 மற்றும் அடுக்கு-2 (Tier-2 and Tier-3) நகரங்களிலுள்ள 9,000 இளைஞர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு முயற்சி உணர்வை ஏற்படுத்துதல், தொழில்முனைவோர் திறன், புதுமை சிந்தனை வழங்கல், திட்ட முன்வைப்பு, பயிற்சி, கையேடு, வழிகாட்டுதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது நிமிர்ந்து நில் திட்டத்தை மையக்கல்லூரி மற்றும் உறுப்பு கல்லூரி நிறுவனங்கள் (Hub and Spoke ) முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமானது மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் நிமிர்ந்து நில் திட்டத்தை செயல்படுத்துவார்கள். மற்ற உயர் கல்வி நிறுவனங்கள் உறுப்புக்கல்லூரிகளாக செயல்படுவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் மைய கல்லூரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிமிர்ந்து நில் திட்டத்தை கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்படுத்தும்.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் குறிப்பாக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி(Entrepreneurship Development Programme), கட்டண பயிற்சி(paid Programmes), பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்(School Innovation Development Project), தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி(TNYIEDP), புத்தாக்க பற்று சீட்டு திட்டம் மற்றும் Innovation Voucher Programme A&B, அறிவுசார் காப்புரிமை (Intellectual Property Facilitating Centre), தொழில் முனைதல் மற்றும் புத்தகத்திற்கான சான்றிதழ் படிப்பு (Certificate Programme in Entrepreneurship and Development) உட்பட பல்வேறு செயல்பாடுகளை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.நிமிர்ந்து நில் என்ற திட்டமானது மாணவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் மாணவர்கள் சமுதாயத்தில் அல்லது வேறு தொழில்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை மாதிரி வடிவம் கொண்டு விளக்கம் பட்சத்தில் அந்த யோசனைகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கு ஐடியேசன் கேம்ப்(ideation Camp) இரண்டு நாள் பயிற்சியும், பூட் கேம்ப்(Boot Camp) மூன்று நாள் பயிற்சியும் வழங்கப்படும். இறுதியாக சென்னையில் நடைபெறக்கூடிய இறுதி சுற்றில் வெற்றி பெறும் 30 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படும்.மேலும், வெற்றி பெற்ற மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வளர் தொழில் மையங்களோடு (Incubation Centre) அவர்களுக்கு இணைப்பு ஏற்படுத்தி வசதிகள் செய்து தரப்படும்.எனவே, இப்பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக் கொண்டு இத்திட்டத்தின் நோக்கம் குறித்து அறிந்து மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்ல அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இப்பயிற்சி வகுப்பில், தமிழ்நாடு இளைஞர் கண்டுபிடிப்பு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள் குறித்தும், மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும், இந்த புதுமையான நவீன உலகில் மாணவர்கள் தொழில்முனைவோராக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்கு கல்லூரிகளின் பங்களிப்பு குறித்தும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 40 க்கும் மேற்பட்ட கல்லூரி முதலவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் (04.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் துலுக்கன்குறிச்சி ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளின் தரம், சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர்,சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சியில் செயல்பட்டு வரும், நியாய விலைக்கடைகளில் பொருட்களின் இருப்பு, அரிசி, பருப்புகள் மற்றும் அவைகளின் தரம் குறித்து கேட்டறிந்து, அங்கு பயன்பெறும் பொதுமக்களிடம் கலந்துரையாடி, பொது விநியோகத்திட்டத்தின் மூலம் கிடைக்க பெறும் சேவைகள், அதில் உள்ள குறைகளை கேட்டறிந்து, எடை கற்களின் அளவு முறைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும்,சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பேப்பர் கப் (காகித பை) தயாரிக்கும் முறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கும் வகையில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கானமுகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்வதில் உள்ள குறைகளை கேட்டறிந்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, போது, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி கி.திலகம், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.