கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாம்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் (17.09.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கத்தின் (SWASTH NARI SASHAKT PARIVAR ABHIYAAN) கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
பின்னர், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கம்(SWASTH NARI SASHAKT PARIVAR ABHIYAAN) என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதுடன், தரமான மருத்துவ வசதிகள் மற்றும் விழிப்புணர்வை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் 17.09.2025 முதல் 02.10.2025 வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குறிப்பிட்ட சுகாதாரத் தேவைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.மேலும் இந்த 16 நாட்கள் தொற்று அல்லாத நோய்கள், புற்றுநோய்கள், ரத்த சோகை, காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கான சுகாதார பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வும், பரிசோதனை முகாம்களும், தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள்;, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும்; ஏற்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த திட்டத்தில் மாவட்ட முழுவதும் மருத்துவ வல்லுநர்கள், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே வந்து, பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான பரிசோதனைகள், ஸ்கிரீனிங், இரத்த சோகை பரிசோதனை செய்வதோடு, ஊட்டச்சத்து குறித்தும் ஆலோசனைகள் வழங்குவார்கள். இதன் மூலம் மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிந்தைய குழந்தை இறப்பு விகிதம் குறைக்கப்படும்.அதுபோல மாவட்டத்தில்; நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் மூலம் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.எனவே, இது போன்ற திட்டங்கள் மூலமாக மக்கள் பயனடைந்து தங்களது ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
17.09.2025 முதல் 02.10.2025 வரை ஒவ்வொரு வட்டாரத்திலும் இதுபோன்ற முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களுடைய நோக்கம் என்னவென்றால் வளமான பெண்கள், தாய்மார்களால் தான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும் என்பதற்காக தான்.பெண்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகளை முறையாக செய்ய வேண்டும். இப்பொழுது இருக்கின்ற நவீன அறிவியல் பரிசோதனைகளில் நம்முடைய ரத்த பரிசோதனைகளிலேயே அனைத்தும் தெரிந்து விடுகிறது.நோய் வருவதற்கு முன் நம்மை காத்துக் கொள்ள வேண்டும். சிறிய அளவில் இருக்கும் போது அதனை கண்டுபிடித்து அதற்கான மருத்துவ முறைகளை செய்வது முக்கியமானது.
தமிழகத்தில் சுகாதாரத்தினுடைய வளர்ச்சி என்பது பிரம்மாண்டமாக இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் மிகப்பெரிய அளவிலே தமிழக மக்களின் ஒவ்வொருவருடைய சுகாதாரம் மேம்பட்டு வருகிறது. இந்த முன்னேற்றம் தொடர்ந்து பல வருடங்களாக நடைபெற்று இருக்கக்கூடிய முன்னேற்றம். அதற்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிற மருத்துவ குழுவுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதாரத்தைச் சார்ந்த மற்ற அலுவலர்கள், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவர்கள், பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply