விளையாட்டு போட்டிகள் . APRIL 3RD
ஈட்டி எறிதல்.
இந்தியன் ஓபன் ஈட்டி எறிதலில் அன்னு ராணிதங்கம் வென்றார்.
பஞ்சாப்பில் இந்தியன் ஓபன்தடகள போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் உ.பி., அணியின் அன்னு ராணி32, 6 வது, கடைசி வாய்ப்பில் 56.43 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
குத்துச்சண்டை:
பிரேசிலில் உலக குத் துச்சண்டை கோப்பை தொடர். 6 நாள் நடக்கும் இத்தொடரில் 19 நாடுகளில் இருந்து 130 பேர் பங்கேற்றுள்ளனர். 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள புதிய எடைப் பிரிவுகளில் இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் முதல் தொடர் இது.
50 கிலோபிரிவு ,காலிறுதியில்,20 வயதான, இந்தியாவின் தேசிய சாம்பியன் ஜடுமானி சிங், உலககோப்பை குத்துச்சண்டையில் பிரிட்டனின் எல்லிஸ் டிரோபிரிட்ஜை சந்தித்தார். இதில் ஜடுமானி 3-2 என்ற வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
வில்வித்தை
அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை(ஸ்டேஜ் 1)தொடர் ஏப். 813ல் நடக்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் ஆதித்தி, அன்ஷிகா குமாரி, மதுரா, சிக்கிதா, உதய் கம்போஜ், திராஜ்பொம்மரதேவா என 6 வீரர், வீராங்கனைகள், பயிற்சியா ளர்கள் என 12 பேர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
ஆனால் இதற்கான விசா இன்னும் கிடைக்கவில்லை. இந்திய வில்வித்தை சங்கதலைவர் கூறுகையில், "கடந்த 40 நாளுக்கு முன் விசா கேட்டு விண்ணப்பித்தோம். உரிய நேரத்தில் கிடைத்துவிடும் என்றனர். பின் 'சிஸ்டம்' பிரச்னையாக கடந்த 15 முதல் 20 நாளாக இதே பிரச்னை தொடர்கிறது. இதுகுறித்து இந்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையத்தில் முறையிட்டும், சிக்கல் தீரவில்லை," என்றார்.இந்திய வீரர் திராஜ் கூறு கையில், " விசா கிடைக்காத தால், தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது
0
Leave a Reply