25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சிவகாசி அருகே நாரணாபுரம் கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி சர்வதேச பளுதுாக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி அருகே நாரணாபுரம் கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி சர்வதேச பளுதுாக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.

அச்சக தொழில் செய்து வரும் தவசிக் குமார் 56. இவரது மனைவி உணவியல்நிபுணராக பாண்டிமாதேவி 50. இந்தத் தம்பதியினரின் இரு மகன்களுக்கும் திருமணமாகி பேரன்கள் உள்ளனர். பாண்டிமாதேவி நவ 30ல் தாய்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்றார். 20 நாடுகளிலிருந்து 250க்கும்  மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், இதில் இந்தியாவிலிருந்து 19 பேர் கலந்து கொண்டனர்.

வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் 40 முதல் 50 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பிரிவில் 310 கிலோ எடையை துாக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். 

கடந்த மூன்றுஆண்டாகஇப்போட்டிக்குதயாரானேன்.ஏற்கனவேமாநிலஅளவில் 5 போட்டிகளிலும், தேசியஅளவில் 3 போட்டிகளிலும் தங்கம் வென்று தாய்லாந்து போட்டிக்கு தேர்வானேன்.

பாண்டிமா தேவி கூறு கையில் "சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையல்ல. 37 வயதிற்குப்பிறகு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் தூண்டப்பட்ட எனக்கு 50 வயதில் சர்வதேச பளு துாக்குதலில் தங்கப்பதக்கம் வென்றதை நினைத்துபெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம் கொள்கிறேன்.பல்வேறு போட்டிகளில் சாதனை படைக்க ஆசைப்படுகிறேன்" என்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News