கால்பந்து , மல்யுத்தம் விளையாட்டு போட்டிகள் .
கால்பந்து
கிறிஸ்டியானோ ரொனால்டோ 40.போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன். கிளப் அரங்கில் தற்போது சவுதி அரேபியாவின் அல்நாசர் அணிக்காக விளையாடுகிறார். இவரது அணி, கிளப் அணிகளுக்கான 'பிபா' உலககோப்பை, தொடரில் (அமெரிக்கா, 2025, ஜூன் 14-ஜூலை 13) பங்கேற்க தகுதி பெறவில்லை.
கிளப் உலக தொடரில் பங்கேற்கும் 32 அணிகள்,ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளலாம், என அறிவிக்க, 'பிபா' தயாராகி வருகிறது.
மல்யுத்தம்
சீனியர் ஆசியமல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டானில், இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியவின் உதித்குமார் ஜப்பானின் டாகரா சூடா மோதினர். இதில் உதித் குமார் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
இத்தொடரில் இந்தியா, 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் எனமொத்தம் 10 பதக்கம் கைப்பற்றியது.
0
Leave a Reply