சென்னை, பஞ்சாப் அணிகள் நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது. பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 210/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சேப்பாக்கத்தில் இன்று சந்திக்கிறது. இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சென்னை சேப்பாக்கத் தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலும் ,மூத்த வீரர் டோனி பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடமாட்டார் என்றாலும் அணியினருடன் இருந்துஉற்சாகப்படுத்தி, நேற்று பயிற்சியின் போது வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கொல்கட்டா அணி, ஐதராபாத் அணியை நேற்று கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற கொல்கத்தா அணி பீல்டிங் தேர்வு செய்தது.ஐதராபாத் அணி 20 ஓவரில் 226/8 ரன் குவித்தது, அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஐதராபாத் 65 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ,தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள்கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்தநியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்ததுநியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்து 2 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்தது.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ,ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இதில் நேற்று நடந்தபோட்டியில், ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் பயந்தலாவின் பயார் குவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சச்சின் சிவாச் கால் இறுதியில் சீனதைபேயின் செங் வெய் லீயை சந்திக்கிறார் எதிர்கொள்கிறார்.இந்திய வீரர் விஸ்வநாத் சுரேஷ் ,50கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் , 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் பெக் ஸாட் எர்ஷோவை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் விஸ்வநாத் சுரேஷ், உலக சாம்பியனான சன்ஜார் தாஷ்கன் பேயை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே பயணம் 20 ஓவர் போட்டி தொடரில் ,இந்தியா-ஜிம்பாப்வே அணிகள்23, 25, 26 ஆகிய தேதிகளில் ஹராரேயில் விளையாடும்.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி, ரிஷாப் பன்ட் கேப்டனாக உள்ள லக்னோ அணியை நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற அக்சர் படேல், பீல்டிங் தேர்வு செய்தார். லக்னோ அணி 18.4 ஓவரில் 141 ரன்னில் ஆல் அவுட்டானது. டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 வயதுக்கு உட்பட்டோர் 8-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் ,பங்கேற்றுள்ள 7 அணிகள் இருபிரிவாகபிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. அரைஇறுதிக்கு லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் நேபாளம் (7 புள்ளி), பூடான் (4 புள்ளி) அணிகள் முறையே முதல் இருஇடங்களை பிடித்து முன்னேறியது. இலங்கை (3 புள்ளி), மாலத்தீவு (2 புள்ளி) அணிகள் 3-வது, 4வது இடம் பெற்று வெளியேறின. 'பி' பிரிவில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, ஒரு டிரா) சமநிலை வகித்தாலும் கோல்வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியா முதலிடத்தையும், வங்காளதேசம் 2-வது இடத்தையும் பெற்றுஅரைஇறுதிக்குள் நுழைந்தன. பாகிஸ்தான் (2 ஆட் டங்களிலும் தோல்வி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 2வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பூடானை (இரவு 8.30 மணி) சந்திக்கிறது. வலுவான இந்திய அணியின் சவாலை பூடான் சமாளிப்பது சிரமமே. மற்றொரு அரைஇறுதியில் நேபாளம்- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
சென்னையை அடுத்தபையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ,ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் ,கேலோ இந்தியா பெண்கள் தேசிய கிக் பாக்சிங் லீக் போட்டி ,3 நாட்கள் சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் தமிழக அணி 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவரான நீனா, உலகக்கோப்பை போட்டியில் பதக்கம் வென்றவரான சுபாஷினி ஆகியோர் தங்கள் பந்தயங்களில் ,தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். மராட்டியம் 9 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்என 16 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்தது.இந்திய பெண்கள் கபடி அணியின் முன்னாள் கேப்டன் கவிதா செல்வராஜ், காமன்வெல்த் வலுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்றவரான டாக்டர் ஆர்த்தி, ஆகியோர் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினர்.
மங்கோலியா தலைநகர்உல்லான்பத்தாரில் ஆசிய குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டி. ,பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில்இந்திய வீராங்கனை பிரியா 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ரிம்மா வொலோசென்கோவை தோற்கடித்தார்.55 கிலோ எடைப் பிரிவின் ஆண்களுக்கான முதல் சுற்றில், இந்திய வீரர் ஜடுமணி சிங் 2-3 என்ற கணக்கில் 'நம்பர் ஒன்' வீரரான ரிம்மா யமகுச்சியிடம் (ஜப்பான்) போராடி வீழ்ந்தார்.