அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்சும், மும்பைஇந்தியன்சும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு மோதின.பலத்த மழையால் ஆட்டம் தொடங்குவதில் 2- 3/4 மணி நேரம் தாமதத்தால் ,11 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன்ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.11 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட் டுக்கு 150 ரன்கள் குவித்தது. மும்பை அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்களே எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சீனாவின் நிங்போ நகரில் ,43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதில் லக்ஷயா சென், பிரனாய், ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, உன்னதி ஹூடா உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் களம்காணுகிறார்கள். இரட்டையர் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை ,காயம் காரணமாக விலகியுள்ளது.
ஆண்கள் பிரிவில் தோல்வியே சந்திக்காத உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தாரோவ் 6 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 டிரா) முதலிடத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் பேபியானோ கருணா 4½ புள் ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 7சுற்று முடிந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 3% புள்ளிகளுடன் (ஒருவெற்றி, 5 டிரா, ஒரு தோல்வி) 4-வது இடத்தில் இருக்கிறார். இனி எஞ்சிய 7 சுற்றிலும் சிறந்த முடிவுகளை பெற்றால் மட்டுமே பிரக்ஞானந்தாவால் பட்டம் வெல்லும் வாய்ப்பில் நீடிக்க முடியும். பெண்கள் பிரிவில் 8 வீராங்கனைகள் இடையிலான, தமிழகத்தின் ஆர். வைஷாலி கடைசி இரு ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடத்தில் ,பட்டம் வெல்லும்வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் தென்கொரியாவின் ஏஜி இம்மை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பிரீத்தி இறுதி சுற்றில் 3 முறை உலக சாம்பியனான ஹூவாங்சியோளவா வென்னை (சீன தைபே) எதிர் கொள்கிறார்.60 கிலோஎடைப்பிரிவின்அரைஇறுதியில்இந்தியவீராங்கனைபிரியா 5-0 என்றகணக்கில்மங்கோலியாவின் நமூன்மோன்கோரை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். குறைந்தது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்த பிரியா இறுதி ஆட்டத்தில் வடகொரியாவின் உன் கியோங் வோனை சந்திக்கிறார். இதேபோல் 70 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் ஒய்ஷா தோய் ராவை (உஸ்பெகிஸ்தான்) வென்று இறுதிப்போட்டியை எட்டினார்.
பில்லி ஜீன் கோப்பை (பெட் கோப்பை) டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப் 1 போட்டி பெண்கள் அணிகளுக்கான டெல்லியில் இன்றுமுதல் 11ந்தேதிவரைநடக்கிறது.இதில் இந்தியா,இந்தோனேசியா, தென்கொரியா, மங்கோலியா, நியூசிலாந்து, தாய்லாந்து ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை 'ரவுண்ட்' ராபின் லீக்' முறையில் மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி ,14 அணிகள் இடையிலான பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று இரவு சென்னை நேரு ஸ்டே டியத்தில் 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., அறிமுக அணியான இன்டர் காஷியைமுதல்முறையாக எதிர் கொள்கிறது. சென்னை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. முந்தைய ஆட்டத்தில் எப்.சி.கோவாவுடன் டிரா கண்டது. இன்டர் காஷி 6 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 2 டிரா, 3 தோல்வியுடன் 5 புள்ளிகள் எடுத்துள்ளது.சென்னை அணி ஐ லீக்கில் இருந்து முன்னேறி இருக்கும் இன்டர் காஷியை வீழ்த்தி 2-வது வெற்றிக்குகுறி வைத்துள்ளது.
லீக் போட் டியில் ஐதராபாத், லக்னோ அணிகள்ஐதராபாத், ராஜிவ் சர்வதேச மைதானத்தில்நேற்று மோதின. 'டாஸ்' வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார்.ஐதராபாத் அணி 20 ஓவரில் 156/9 ரன் எடுத்தது. லக்னோ அணி 19.5 ஓவரில் 160/5 ரன் எடுத்து, லக்னோ அணி இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று, நடந்த போட்டியில், பெங்களூரு, சென்னை அணிகள் மோதின.'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 250 ரன் எடுத்தது. சென்னை அணி 20 ஓவரில் 207 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி,கிரிக்கெட் லீக் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை (250/3) பதிவு செய்தது .
மங்கோலியா தலைநகர் உலான்பத்தூரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் கால் இறுதியில் உலக சாம்பியனான இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் யுகா சதாமட்சுவை வென்று அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ) 5-0 என்ற கணக்கில் சீனாவின் ஜியி சென்னை வென்று அரை இறுதிக்கு முன்னேறினர். இந்தியாவின் லோகேஷ் (85 கிலோ) கொரியா வின் கிச்சாய் கிம்மையும், ஆகாஷ், துர்க்மெனிஸ்தானின் பாக்டி யாரோவையும், ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ). கிர்கிஸ்தானின் அலி பேயையும் ஆண்கள் பிரிவில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினர்.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் 8 சுற்றுகளாகஉலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் 2-வது சுற்று உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் பந்தயம் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை ஸ்பெயினின் கிரனடாவில் நடக்கிறது. 51 நாடுகளைச் சேர்ந்த 434 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.24 பேர் கொண்ட இந்திய அணியில் ரிதம் சாங்வான் (25 மீட்டர் பிஸ்டல்)உலகபோட்டியில் 9 பதக்கம் வென்ற அனுபவசாலியான அஞ்சும் மோட்கில் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவு) மெகுலி கோஷ் (10 மீட்டர் ஏர் ரைபிள்ஸ்) செயின் சிங், அகில் ஷியோரன், தனுஷ் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.