கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் சிமெண்ட் மூட்டைகள் உரிய பயனாளிகளிடம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், பயன்பெற்றவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (09.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.
அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியவள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்; முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை மூலம் கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும், மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆமணக்குநத்தம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ள இடத்தினை பார்வையிட்டு, முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும், அப்பகுதிகளில் வீடு வீடாக கோரிக்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
மேலும், ஆமணக்குநத்தம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.பின்னர், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.31.85 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை, புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சேகரிப்பு கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்து, சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு குறித்தும், பயன்பெற்றோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சிமெண்ட் மூடைகள் பெற வருகை தந்த புதிய பணி நியமன ஆணை பெற்ற பயனாளிகளிடமும் விபரங்களை கேட்டறிந்து, உரிய பயனாளிகளிடம் சென்றடைகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உறுதி செய்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply