இந்தியாவுக்கு ஆசிய வில்வித்தையில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசிய வில்வித்தை ஸ்டேஜ் 1 தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில் ரீகர்வ் பிரிவில் ஆண்கள் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின் சுஹ்ஜெய்ன், தேவாங்க், ஜூயல் இடம் பற்ற இந்திய அணி, தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து இருந்தது.
இந்திய அணி, நேற்று நடந்தகாலிறுதியில் ,மங்கோலியாவை சந்தித்தது.ஷு ட் ஆப்' வரை சென்ற, இப் போட்டியில் இந்தியா 29-27 என வெற்றி பெற்றது.அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவை 5-1 என்ற கணக்கில், வென்று பைனலுக்கு முன்னேறியது.
இந்தியாவின் சிகிதா, தேஜல், ராஜ் கவுர்இடம் பெற்ற அணி, பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் ,தகுதிச்சுற்றில் 'நம்பர்-1' இடம்பெற்றது. நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி, 232-222 எனஹாங்காங்கை வென்று,அரையிறுதியில் இந்திய அணி, 229-226 என தாய்லாந்தை வீழ்த்தியது. பைனலில் (நாளை) இந்தியா-கஜகஸ் தான் மோத உள்ளன.
பெண்கள் அணிகளுக்கான ரீகர்வ் ,அரையிறுதியில் இந்தியாவின் ரிதி, கீர்த்தி, ருமா இடம் பெற்ற அணி, 1-5 என சீனாவிடம் தோற்றது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணி 5-1 என மலேசியாவை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றியது.
இந்தியாவின் ரஜத் சவுகான், ரிஷாப், பிரதமேஷ் இடம் பெற்ற அணி, ஆண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவு அரையிறுதியில் தகுதிச்சுற்றில் ,'நம்பர்-1' இடம் பிடித்தது. எனினும் அரையிறுதியில் வியட்நாமிடம் இந்திய அணி, 233-234 என தோற்றது.அடுத்து நடந்த போட்டியில் 234-232 என பூடானை சாய்த்து, வெண் கலம் வசப்படுத்தியது.
இந்தியாவின் ரிதி, பெண்களுக்கான தனிநபர் ரீகர் பிரிவு அரையிறுதியில் ,6-0 என மலேசியாவின் ஜோயேடனை வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply