25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியா ஆசிய துப்பாக்கி சுடுதலில் 31 பதக்கங்கள் வென்றது. ஒட்டுமொத்தமாக (சீனியர், ஜூனியர், யூத்) போட்டியில் 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என, 103 பதக்கம் வென்றது இந்தியா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா ஆசிய துப்பாக்கி சுடுதலில் 31 பதக்கங்கள் வென்றது. ஒட்டுமொத்தமாக (சீனியர், ஜூனியர், யூத்) போட்டியில் 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என, 103 பதக்கம் வென்றது இந்தியா.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன்  கஜகஸ்தானில், ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்' பிரிவில் ராஜ்கன்வர் சிங் சாந்து (583.22 புள்ளி),குர்பிரீத் சிங் (579.17), அங்குர் கோயல் (571.18) அடங்கிய இந்திய அணி, 1733.57 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் தனிநபர் பிரிவில் ராஜ்கன்வர் சிங் சாந்து தங்கம் வென்றார்.

 இந்தியாவின் அங்கூர் மிட்டல் ஆண்களுக்கான 'டபுள் டிராப்' பிரிவில் தங்கம் வென்றார். அனுஷ்கா (93 புள்ளி), பிரனில் (89), ஹபிஸ் (87) அடங்கிய இந்திய அணி  பெண்கள் அணிகளுக்கான டிராப்' பிரிவில் தங்கத்தை கைப்பற்றியது. தனிநபர் பிரிவில் 'டாப்-3' இடம் பிடித்த இவர்கள் பதக்கம் வென்றனர்.

50 மீ., 'ரைபிள் 'புரோன்' பெண்களுக்கான தனி நபர் பிரிவில் இந்தியாவின் மணினி கவுசிக், 617.8 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். இதன் அணிகள் பிரிவில் மணினி கவுசிக் (617.8), சுரபி பரத்வாஜ் ரபோல் (614.4), வினோத் விதர்சா (613.8) அடங் கிய இந்திய அணி, 1846.0 புள்ளிகளுடன் வெள்ளிப்ப தக்கத்தை கைப்பற்றியது. 

சீனியர் பிரிவில் 14 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என, 31 பதக்கம் வென்ற இந்தியா 2வது இடம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக (சீனியர், ஜூனியர், யூத்) 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என, 103 பதக்கம் வென்றது இந்தியா. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News