'ஹாக்கி மந்திரவாதி' என போற்றப்பட் ஹாக்கி தயான் சந்த் சாதனைக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க ஹாக்கி நட்சத்திரங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை.
.இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த். 1905, ஆக. 29ல் உ.பி.,யில் பிறந்தார். சிறந்த முன்கள வீரரான இவர், தனது மந்திர ஆட்டத்தால் 1928, 1932, 1936ல் இந்திய அணி தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கைகொடுத்தார். ஹாக்கி வரலாற்றில் அதிக கோல் (570, 185 போட்டியில்) அடித்து சாதனை படைத்தார். 'ஹாக்கி மந்திரவாதி' என போற்றப்பட்ட இவர், 74வது வயதில் (1979, டிச.3) காலமானார்.
இவரது பெயரில் இந்திய விளையாட்டின் உயர்ந்த 'தயான் சந்த் கேல் ரத்னா விருது’ வழங்கப்படுகிறது. பிறந்த நாளான ஆக. 29, தேசிய விளையாட்டு தினமாக கடை பிடிக்கப்படு கிறது. இவருக்கு 1956ல் 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது.
"ஒலிம்பிக் கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் ஹாக்கியில் தான் கிடைத்தது. இதற்கு தயான் சந்த் முக்கிய காரணம் .இந்திய விளையாட்டுக்கு இவர் செய்த சேவைக்கு அங்கீகாரமாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டு மென அனைத்து ஹாக்கி நட்சத்திரங்கள் சார்பில் அரசை கேட்டுக் கொள்கிறேன்,"என்றார் அரங் திலிப் டிர்கே.
0
Leave a Reply