25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Sep 05, 2025

சீனாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதியில் தான்யா.

 சர்வதேச மாஸ்டர்ஸ் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் சீனாவில் ,சர்வதேச மாஸ்டர்ஸ். 2வது சுற்றில்  இந்தியாவின் தான்யா ஹேம்நாத், தைவானின் யு வெய் ஹுவாங்கை எதிர்கொண்டார்.முதல் செட்டில் தான்யா 11-12 என பின்தங்கினார். அடுத்து தான்யா, தொடர்ந்து 10 புள்ளி எடுக்க, முதல் செட்டை 21-12 வசப்படுத்தினார். 2வது செட்டிலும் 5–10 என பின்தங்கிய தான்யா, பின் 21-18 என கைப்பற்றி னார். முடிவில் தான்யா 21-12, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். 

Sep 05, 2025

ஆசிய கோப்பை கால்பந்து தொடர்  இந்தியா வெற்றி .

23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர்,  சவுதி அரேபியாவில் ,வரும் 2026, ஜன. 7-25 நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 44 அணிகள் பங்கேற்கின்றன. 11 இடங்களில் போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி 'எச்' பிரிவில் கத்தார், பஹ்ரைன், புருனேய் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.இப்போட்டிகள்  கத்தாரின் தோகாவில் நடக்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பஹ்ரைனை சந்தித்தது.  இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

Sep 05, 2025

ஆசிய கோப்பை ஹாக்கி.

ஆசிய கோப்பை ஹாக்கி சீனாவின் ஹாங்சோவ் ,11வது சீசன்இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளை யாடுகின்றன.ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஒவ்வொரு அணி யும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் (செப். 14) விளையாடும். 

Sep 04, 2025

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் புனே வெற்றி .

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், நேற்று, விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் புனே, பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் புனே அணி 26-22 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் புனே வீரர்கள், பெங்கால் அணியினரை 'ஆல்-அவுட்' செய்து முடிவில் புனே அணி 45-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகளை வீழ்த்திய புனே அணி  வெற்றியை பதிவு செய்தது. புனே அணிக்கு அஸ்லாம் இனாம்தர் (11 புள்ளி), ஆதித்யா ஷிண்டே (11) கைகொடுத்தனர். பெங்கால் அணி சார்பில் கேப்டன் தேவங்க் 17 புள்ளி பெற்றார்.

Sep 04, 2025

இந்திய நட்சத்திரங்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கின்றனர்.

முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடர் உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று துவங்கும் .இத்தொடரில் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவில் போட்டி நடக்க உள்ளன.65 நாடுகளில் இருந்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 17 பேர் உட்பட, 550 நட்சத்திரங் கள் பங்கேற்க உள்ளனர்.இம்முறை இந்தியா சார்பில் ஆண்கள் (10), பெண்கள் (10) என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர். 

Sep 04, 2025

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரி ல் 12வது சீசன் இந்தியா-தென் கொரியா 'டிரா' .

 பீஹாரில் ஆசியகோப்பைஹாக்கிதொடரின் 12வதுசீசன் பீஹாரில்இந்தியா,'நடப்பு சாம்பியன்' தென்கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, 'பி' பிரிவில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா அணிகள் முதல் இரு இடம் பிடித்து 'சூப்பர்–4’ சுற்றுக்கு முன்னேறின.நேற்று 'சூப்பர்-4' போட்டிகள் துவங்கின. உலகத் தரவரிசையில் 7வது இடத்திலுள்ள இந்திய அணி, 14வது இடத்திலுள்ள தென் கொரியாவை சந்தித்தது. முடிவில் போட்டி 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. 

Sep 04, 2025

ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப்.

ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹாங்காங்கில் பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியா சார்பில் பிரிஸ்டி முகர்ஜீ, பிரதிக்சா, தியா, தீபிஹா உட்பட மொத்தம் 58 பேர் பங்கேற்றனர். பங்கேற்ற 8 சுற்றிலும் பிரிஸ்டி வெற்றி பெற்று 8.0 புள்ளி பெற்றார். இதையடுத்து ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் 1.5 புள்ளி வித்தியாசத்தில் முந்திய பிரிஸ்டி, முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.கிரிஸ்டி 5.5 புள்ளியுடன் (5 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி)  கிளாசிக்கல் பிரிவில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான மற்றொரு கிளாசிக்கல் பிரிவில், இந்தியாவின் தியா சவுத்ரி பங்கேற்றார்.இவர், மொத்தம் 6.0 புள்ளிஎடுத்து மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

Sep 03, 2025

இத்தாலியின் ஜானிக் சின்னர் யு.எஸ்.ஓபன் காலிறுதியில் …..

யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் 'நம்பர் -1' வீரர், இத்தாலியின் ஜானிக் சின்னர், 23வது இடத்திலுள்ள கஜகஸ்தானின் அலெக் சாண்டர் பப்ளிக்கை சந்தித்தார். முதல் செட்டை 6-1 என வென்ற சின்னர், அடுத்த இரு செட்டையும் 6–1, 6–1 என எளிதாக கைப்பற்றினார். மூன்றாவது முறையாகஇத்தொடரில் ஒரு மணி நேரம் 23 நிமி டம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சின்னர், 6–1, 6–1, 6–1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.அமெரிக்காவின் 45 வயது வீனஸ்வில்லியம்ஸ்,கன டாவின் லேலா ஜோடி, பெண்கள்இரட்டையர் மூன்றாவது சுற்றில் 6-3, 6-4 என ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடியை வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் ,ஆஸ்திரேலியாவின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஈகுவடாரின் எஸ்கோபர், மெக்சிகோவின் ரேய்ஸ் வரேலா ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 26 நிமிடம் நடந்த போட்டியில் காலிறுதிக்கு முந்தையசுற்றுக்குள் பாம்ப்ரி ஜோடி 6-1, 7-5 என வெற்றி பெற்று, நுழைந்தது. 

Sep 03, 2025

விளையாட்டு போட்டிகள் . 3rd SEPTEMBER 2025

இன்று 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர்உஸ்பெகிஸ்தானில் துவங்குகிறது. இதில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங் கேற்க தகுதி பெறலாம். இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் வைஷாலி, ஹரிகா, வந்திகா விளையாட உள்ளனர்.செப். 7ல் டில்லியில் தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடர், 13 ஆண்டுக்குப் பின் துவங்குகிறது. நடப்பு தேசிய சாம்பியன் தியா, காமன்வெல்த்தில்தங்கம் வென்ற சத்யன், ஹர்மீத் தேசாய் உட்பட மொத்தம் 2958 பேர் பங்கேற்கின்றனர். டில்லியின் மணிகா பத்ரா, சர்வதேச அட்டவணை காரணமாக இதில் பங்கேற்கவில்லை.இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட்போர்டு 'ஸ்பான்சர்' ஒப்பந்தத்தில் இருந்து 'டிரீம் லெவன்' விலகியது. விண்ணப்பங்களை சமர்பிக்க செப். 16, கடைசி தேதியாக,  அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய 'ஸ்பான்சர்' ஏல அறிவிப்பு வெளியானது.இந்தியா சார்பில் 'சீனியர்' பிரிவில் பங்கேற்ற நிஷா, சம்ருதி,ஹங்கேரியின் புடாபெஸ்டில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக் 6,7வது இடம் பிடித்தனர் .

Sep 03, 2025

புஜைரா குளோபல் செஸ்  ஐக்கிய அரபு எமிரேட்சில்முதலிடம் பிடித்து, ரூ. 20.27 லட்சம் பரிசு பெற்றார். பிரனவ் சாம்பியன் .

புஜைரா குளோபல் செஸ்  ஐக்கிய அரபு எமிரேட்சில்70நாடுகளின் 530 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்தியாவின் பிரனவ், பிரனேஷ், நிஹால் சரின் உட்பட44 பேர்சூப்பர் ஸ்டார்ஸ் பிரிவில் களமிறங்கினர்.இதில், தமிழகத்தை சேர்ந்த பிரனவ், கடந்த ஆண்டு (2024) நடந்த சென்னை செஸ் தொடரில் சாலஞ்சர் பிரிவில் கோப்பை வென்றிருந்தார்.இம்முறை மாஸ்டர்ஸ் பிரிவில் பிரனவ் வெங்கடேஷ், 9வது இடம் பெற்றார்.ஜூனியர் உலக சாம்பியன் ஆன 18 வயது பிரனவ்  குளோபல் தொடரில் துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார். 9வது, கடைசி சுற்றில் ஸ்பெயினின் ஆலன் பிஷோட்சை சந்தித்தார். போட்டியின் 54 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 9 சுற்றில் ஒன்றில் கூட தோற்காத பிரனவ், 7.0 புள்ளியுடன் (5 வெற்றி, 4 'டிரா') முதலிடம் பிடித்து கோப்பை வென்றார். இவருக்கு ரூ. 20.27 லட்சம் பரிசு கிடைத்தது. 

1 2 ... 74 75 76 77 78 79 80 ... 136 137

AD's