25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Aug 13, 2025

இந்தியாவின் உலக பாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ்  தொடரில் பவினா  பென் படேல்'தங்கம்'

இந்தியாவின் உலக பாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடர்அமெரிக்காவின் வாஷிங்டனில் பெண்கள் ஒற்றையரில் பவினா பென் படேல், அரையிறுதியில் பிரிட்டனின் மேஹன் ஷாக்லெட்டனை 30 எனவென்றார். அடுத்து நடந்த பைனலில் பவினா பென், இஸ்ரேலின் கரோலினை சந்தித்தார்.முதல் செட்டை பவினா 11-4 ,2 வது செட்டில் 11-4 , மூன்றாவது செட்டில் பவினா, 11-5 என வென்றார். முடிவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் பவினா பென், சுபம் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவு லீக் போட்டியில், பிரேசிலின் பிராகா, சுலோவாகியாவின் போரிஸ் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-0 என (12-10, 11-8, 11-9) வெற்றி பெற்றது.

Aug 12, 2025

வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட் பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில், பைனலில் நம்ரதா 

 உலக விளையாட்டு 12வது சீசன்சீனாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் 17 பேர்(10 வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட் பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.பெண்கள் உஷூ போட்டிக்கான 'சாண்டா'52 கி.கி., பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் நம்ரதா பத்ரா, பிலிப்பைன்சின் கிரிசான் பெய்த் கொலாடோ மோதினர். இதில் நம்ரதா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று  பைனலுக்கு முன்னேறினார். இம்முறை இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்தார். நம்ரதா, சீனாவின் மெங்யூ சென் இன்று நடக்கும் பைனலில் மோதுகின்றனர்.

Aug 12, 2025

இந்திய ராணுவ அணி துாரந்த் கோப்பை கால்பந்தில்  வெற்றி.

துாரந்த் கோப்பை கால்பந்துஇந்தியாவில்,  134வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள்,6 பிரிவுகளாக லீக் சுற்றில்விளையாடுகின்றன.'சி' பிரிவு லீக் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த போட்டியில் இந்திய ராணுவம், லடாக் அணிகள் மோதின. இந்திய ராணுவ அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Aug 12, 2025

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரித்திகா 'தங்கம்’

 22 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்தில்,பெண்களுக்கான 80+ கி. கி. எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ரித்திகா 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அசெல்டோக்டாசினை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் யாத்ரி படேல்  பெண்களுக்கான 57 கி.கி., பிரிவு பைனலில் 2-3 என, உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.மற்றொரு பைனலில் (60 கி.கி.,) இந்தியாவின் பிரியா 2-3 என சீனாவின் யூ டியானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் நீரஜ் ஆண்களுக்கான 75 கி.கி., பிரிவு பைனலில் உஸ்பெகிஸ்தானின் ஷவ்கட்ஜோன் போல்டேவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். மற்றொரு பைனலில் (90+ கி.கி.,) இந்தியாவின் இஷான் கடாரியா, உஸ்பெகிஸ்தானின் கலிம்ஜோன் மாமாசோலியேவிடம் வீழ்ந்தார்.22 வயதுகுட்பட்டோர் பிரிவில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்ற இந்தியா 4வது இடம் பிடித்தது. இதன் 19 வயதுகுட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என, 14 பதக்கங்கள் கிடைத்திருந்ததன. 

Aug 12, 2025

இந்திய பெண்கள் ஆசிய ரக்பி போட்டியில்  'வெண்கலம்' .

ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடர் பீஹாரில் ,லீக் சுற்றில் இந்திய பெண்கள் அணி 'டி' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் இந்திய பெண்கள் அணி (7 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது. 'சீ' பிரிவில் முதலிடம் பெற்ற சீனாவை எதிர் கொண்டது. இதில் 7-28 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 12-5 என வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. 'ஏ' பிரிவில் இந்திய ஆண்கள் அணி லீக் சுற்றில் (3ல் 1 வெற்றி, 2 தோல்வி, 5 புள்ளி) 3வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது. 5-6வது இடத்துக்கான போட்டியில் 19-24 என கஜகஸ்தானிடம் தோற்று, 6வது இடம் பிடித்தது. 

Aug 12, 2025

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்  கிரிக்கெட் உலக கோப்பை வெல்வோம்,''என தெரிவித்தார்.

பெண்களுக்கான 13வது உலக கோப்பை தொடர்  இந்தியா, இலங்கையில் (50 ஓவர், செப்.30-நவ.2) நடக்க உள்ளது. இந்தியா, ‘ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் (செப்.30) இந்திய அணி, இலங்கை பங்கேற்கிறது. உலக கோப்பைக்கு முன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளோம். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், தன்னம்பிக்கை அதிகரிக்கும். "இந்திய வீராங்கனைகளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியும் கடின பயிற்சியின் அவசியத்தை உணர்ந்துள்ளோம். உலக கோப்பை போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி வருவதாக, மந்தனா கூறினார். 

Aug 11, 2025

ஆசிய 'சர்பிங்' ரமேஷ் 'வெண்கலம்'

மாமல்லபுரம் கடற்கரையில், ஆசிய 'சர்பிங்' (அலைச்சறுக்கு) சாம்பியன் ஷிப் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான ஓபன் பிரிவு பைனலில்.நேற்று இந்தியாவின் ரமேஷ் புதிஹல் பங்கேற்றார்.இதில் 12.60 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த ரமேஷ், வெண்கலம் வென்றார். இதன் மூலம் ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். 

Aug 11, 2025

கோவை, கொடிசியா மைதானத்தில்தேசிய ‘பைக் ரேஸ்'

நேஷனல் சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப்,எம்.ஆர்.எப்., நிறுவனத்தின் 'எம்.ஆர்.எப்., ரேசிங், காட் ஸ்பீடு' சார்பில், , 2025க்கான இரண்டாம் சுற்று, பைக் ரேஸ், கோவை, கொடிசியா மைதானத்தில் நடந்தது. 'டர்ட் ரேஸ்' எனப்படும் இந்த பந்தயத்தில், ஆங்காங்கே மண் மேடுகள் அமைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 65 வீரர்கள், ஏழு வீராங்கனைகள், ஆறு சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். 'மோட்டோ கிராஸ் ஓபன் கேட்டகிரி', 10 வயதுக்கு உட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர் என, எட்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.வீரர்கள் மண் மேடுகளை தாண்டி விண்ணில் 'பறந்து' சாகசம் புரிந்தனர். ஒவ்வொரு போட்டிக்கும், ஒன்பது சுற்றுகள் வீதம் நிர்ணயிக்கப்பட்ட சூழலில், அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வை யாளர்களை பரவசப்படுத் தியது.'முதல் சுற்று புனேவிலும், இரண்டாம் சுற்று கோவையிலும் முடிந்த நிலையில், அடுத்த சுற்றுப் போட்டி குஜராத்தில் நடத் தப்படும். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்தடுத்து, ஆறு சுற்றுகள் நடத்தப் பட்டு, புள்ளிகள் அடிப்படையில் தேசிய சாம்பியன் அறிவிக்கப்படுவார்' என கூறினர். 

Aug 11, 2025

அன்னு ராணி, முரளி ஸ்ரீசங்கர் உலக கான்டினென்டல் தடகளத்தில் முதலிடம்

 நேற்று உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டிஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ,உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான (செப் 13-21, டோக் கியோ) தகுதிச் சுற்றாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்தியாவின் அன்னு ராணி, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் , 4வது வாய்ப்பில் அதிகபட்சமாக 62.01 மீ., எறிந்து முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை இலங்கையின் தில்ஹானி (56.27 மீ.,), இந்தியாவின் தீபிகா (54.20 மீ.,) கைப்பற்றினர். இந்தியாவின் ஷிவம் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ,(80.73 மீ.,) 2வது இடம் பிடித்தார். இந்தியாவின் ரோகித் யாதவ் (80.35 மீ.,), சச்சின் யாதவ் (79.80 மீ.,),யாஷ்விர் சிங் (78.53 மீ.,) முறையே 4, 5, 6வது இடம் பிடித்தனர். இந்தியாவின் விஷால் ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில், (45.72 வினாடி), அமோஜ் ஜேக்கப் (45.86), சந்தோஷ் குமார் (46.89 வினாடி, தமிழகம்) முதல் மூன்று இடம் பிடித்தனர்.இந்தியாவின் அபினயா பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் (11.57 வினாடி), ஸ்னேகா (11.70), நித்யா காதே (11.70) முதல் மூன்று இடம் பிடித்தனர்.மலேசியாவின் ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் முகமது அசீம் (10.35 வினாடி) முதலிடம் பெற்றார். இந்தியாவின் லாலு பிரசாத் போய் (10.54 வினாடி), ராகுல் குமார் (10.59, தமிழகம்) முறையே 4, 6வது இடம் பிடித்தனர்.  தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் நந்தினி பெண்களுக்கான 100மீ., (13.80 வினாடி) 2வது இடம் பிடித்தார். ஒடிசா வீராங்கனை பிரக்யான் பிரசாந்தி சாஹ் (13.74) முதலிடத்தை கைப்பற்றினார்.இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் அதிகபட் சமாக 8.13 மீ., தாண்டி முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்து இரு இடங்களை ஷாந்வாஸ் கான் (8.04 மீ.,), லோகேஷ் சத்யநாதன் (7.85 மீ.,) பிடித்தனர்.இந்தியாவின் அனிமேஷ் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 20.77 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தின் ராகுல் குமார் (21.17) 3வது இடத்தை கைப்பற்றினார். . 

Aug 09, 2025

ஹரிகாவை சென்னை செஸ் தொடரில் இனியன் வென்றார்.

'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் சென்னையில். மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவு களில் மொத்தம் 20 பேர் பங்கேற்கின் றனர். சாலஞ்சர்ஸ் பிரிவில் வைஷாலி, ஹரிகா என இரு வீராங்கனைகள், 8 வீரர்கள் என 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தன.ஹரிகா, இனியனை சந்தித்தார். சமீபத்திய உலக கோப்பை தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய ஹரிகா, நேற்று. இவர், 39 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். போட்டியில் அபிமன்யு, மெடோன்காவை வென்றார். வைஷாலி -அதிபன் பாஸ்கரன், பிரனேஷ் - திப்தயன், ஹர்ஷவர் தன் -ஆர்யன் மோதிய போட் டிகள் 'டிரா' ஆகின. இரண்டு சுற்று முடிவில் அபிமன்யு, பிரனேஷ், திப்தயன், இனியன், தலா 1.5 புள்ளியுடன் 'டாப்-4' இடத்தில் உள்ளனர். 

1 2 ... 82 83 84 85 86 87 88 ... 136 137

AD's



More News