25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Aug 09, 2025

தான்விகன்னா ஸ்குவாஷ் தொடரில்  2வது இடம்

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் ‘நம்பர்-5', உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்விகன்னா, இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை (உலகத் தரவரிசை 94) எகிப்தின் நுார் ககபியை எதிர்கொண்டார்.'இதன் முதல் செட்டை 3-11 என இழந்த தான்வி, 2  வதுசெட்டை 11-5 என  கைப்பற்றினார். மூன்றாவது செட் 5-11,. நான்காவது செட்டில் போராடிய போதும், 10-12 என பறிபோனது. போட்டியின் முடிவில் தான்வி, 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.எகிப்து வீரர்கள் முகமது கோஹர், யாசின் ஷோடி ஆண்கள் ஒற்றையர் பைனலில் மோதினர். யாசின் 3-0 என (11-5, 11-7, 11-3) நேர் செட்டில் வென்று சாம்பியன் ஆனார். 

Aug 09, 2025

பெண்களுக்கான  ஆசிய கால்பந்து இந்தியா வெற்றி .

ஆசிய கோப்பை பெண்களுக்கான (20 வயதுக்குட்பட்ட)  (தாய்லாந்து), உலக கோப்பை (போலந்து) கால்பந்து தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. மொத்தம் 33 அணிகள்& பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளன.இந்தியபெண்கள்அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தா னுடன் இடம் பெற்றுள்ளது.இதில், இந்தியா - இந்தோனேஷியா மோதிய முதல் போட்டி 'டிரா' (0-0) ஆனது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, துர்க் மெனிஸ்தானை சந்தித்தது. முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் இந்தியா (4) முதல் இடத்துக்கு முன்னேறியது. கடைசி போட்டியில் (ஆக. 10) மியான்மரை சந்திக்கிறது. இதில் வென்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம். 

Aug 08, 2025

இந்தியா 'நம்பர்-63' உலக கால்பந்து தரவரிசையில் …

கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும்பெண்கள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி 70வது இடத்தில் இருந்து 63வது இடத்துக்கு முன்னேறியது. சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் மங்கோலியா (13-0), திமோர் -லெஸ்தே (4-0), ஈராக் (5-0), தாய்லாந்து(2/1) அணிகளை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக தகுதிச்சுற்றின் மூலம் ஆசிய கோப்பைக்கான இடத்தை உறுதி செய்தது. இதன்மூலம் தர வரிசையிலும் முன்னேற்றம் கண்டது இந்தியா.  'யூரோ' கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் 'நம்பர்-1' 'யூரோ' கோப்பைகால்பந்து தொடரில்சுவிட்சர்லாந்தில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த நடப்பு உலக சாம்பியன் ஸ்பெயின் அணி, முதலிடத்துக்கு முன்னேறியது. அமெரிக்க அணி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.தொடர்ந்து 2வது முறையாக 'யூரோ' கோப்பை வென்ற இங்கிலாந்து,4வது இடத்துக்கு முன்னேறியது. சுவீடன் அணி 'நம்பர்-3' இடத்தை கைப்பற்றியது. 

Aug 08, 2025

சர்வ தேச தடகள போட்டி ஈட்டி எறிதலில் அன்னு ராணி 'தங்கம்‘

சர்வ தேச தடகள போட்டி போலந்தில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் அன்னு ராணி 32, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 60.95 மீ.,துாரம் எறிந்தார். அடுத்த வாய்ப்பில் அதிகபட்சம் 62.59 மீ., தூரம் எறிந்தார். முதலிடம் (62.59) பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். துருக்கியின் எடா (58.36), ஆஸ்திரேலியாவின் லியான்னா (58.24) அடுத்த இரு இடம் பெற்றனர். கடந்த 2023 ஆசிய விளையாட்டில் 62.92 மீ.,துாரம் எறிந்து, தங்கம் வென்றார், அன்னு ராணி. தற்போது சிறந்த செயல் பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா,2 நிமிடம்,02.95 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பிடித்தார். 400 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜிஸ்னா மாத்யூ(54.12 வினாடி) 6வது இடம் பெற்றார். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தென்னரசு (45.82, தமிழகம்), 5வது இடம் பெற்றார். ஆமோஜ் ஜெக்கப் (46.18), ராஜேஷ் ரமேஷ் (46.94), 8, 12 வது இடம் பிடித்தனர்

Aug 08, 2025

'கிராண்ட் மாஸ்டர்ஸ்' சென்னை செஸ் தொடரில் அர்ஜுன் வெற்றி.

சென்னையில் 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ்(10), சாலஞ்சர்ஸ்(10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரி கைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், கார்த்திகேயன் முரளி களமிறங்கினர். நேற்று முதல் சுற்றில் அர்ஜுன், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்கை சந்தித்தார்.  அர்ஜுன்,49 வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.வைஷாலி, ஹரிகா இரு வீராங்கனைகள்,8 வீரர்கள் எனசாலஞ்சர்ஸ் பிரிவில் 10 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் அனுபவ ஹரிகா 34, திப்தயன் கோஷை 26,சந்தித்தார். ஹரிகா,44வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். பிரனேஷ், ஆர்யன் சோப்ராவை வென்றார். லியான் மெடோன்கா, வீழ்த்தினார். வைஷாலி-இனியன், ஹர்ஷவர்தனை அபிமன்யு- அதிபன் பாஸ்கரன் மோதிய போட்டி 'டிரா' ஆகின.

Aug 07, 2025

சென்னைகிராண்ட்மாஸ்டர்ஸ்செஸ்தொடர்.

 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் ஒவ்வொரு ஆண்டும்சென்னையில்நடத்தப்படுகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில்மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர்இந்தியாவின்முன்னணிவீரர்கள் மாஸ்டர்ஸ்பிரிவில்அர்ஜுன்எரிகைசி, விதித்குஜ்ராத்தி, நிஹால்சரின், நெதர்லாந்தின் அனிஷ்கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்தியாவின் பிரனவ் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் திறமை வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவில் 'சாலஞ்சர்' பிரிவில் போட்டி நடக்க உள்ளன. கார்த்திகேயன் முரளி, லியோன் மென் டோன்கா, அபிமன்யு, ஆர் யன், அதிபன் பாஸ்கரன் இனியன், பிரனேஷ் என முன்னணி வீரர்களுடன், இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா களமிறங்குகின்றனர். 

Aug 07, 2025

கிரிக்கெட் ஐ.சி.சி.,  தரவரிசை பவுலர்கள் பட்டியலில் முன்னேறிய இந்தியாவின் முகமது சிராஜ்

இங்கிலாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணியினர் தாயகம் திரும்பினர். இந்திய வேகப்பந்துவீச் சாளர் முகமது சிராஜ் 31, பீல்டிங் பயிற்சியாளர் திலிப் உடன் லண்டனில் இருந்து மும்பை வந்தார். அங்கிருந்து, தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றார் சிராஜ். ஐதராபாத் விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் சிராஜுக்கு  உற்சாக வரவேற்பு அளித்தனர்.  லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் இந்தியாவின் முகமது சிராஜ், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9  விக்கெட் (4+5) சாய்த்து, 9 ஆட்ட நாயகன் விருது வென்றார்.இத்தொடரில் 5 போட்டியிலும் விளையாடிய சிராஜ், 1113 பந்துகள், 185.3 ஓவர் வீசி, 23 விக்கெட் கைப்பற்றினார் இதனிடையே டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான ஐ.சி.சி.,  தரவரிசை பவுலர்கள் பட்டியலில் (674 புள்ளி), 27வது இடத்தில் இருந்து முதன் முறையாக 15வது இடத்துக்கு முன்னேறினார் இந்தியாவின் சிராஜ்.

Aug 07, 2025

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்தில் இந்திய பெண்கள் அணி ‘டிரா’

ஆசிய கோப்பை (தாய்லாந்து), உலக கோப்பை (போலந்து) கால்பந்து  பெண்களுக்கான(20 வயதுக்குட்பட்ட) தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று நேற்று மியான்மரில் துவங்கியது. மொத்தம் 33 அணிகள் 8 பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளன.இந்தியபெண்கள்அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க் மெனிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் 8 அணிகள், புள்ளிகளுக்கு ஏற்ப, தரவ ரிசையில் 'டாப்-3' இடம் பெறும் 3 அணிகள், பிரதான தொடருக்கு தகுதி பெறும். நேற்று, இந்திய அணி தனது முதல் போட்டியில் இந்தோனேஷியாவை சந்தித்தது. கடந்த முறை 6-0 என வென்ற இந்தியா, இம்முறை கோல் அடிக்க திணறியது. கடைசி வரை போராடிய போதும். இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முடிவில் போட்டி என 'டிரா' ஆனது. 

Aug 07, 2025

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதியில் தான்வி 

 ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர்  நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன.பெண்கள் ஒற்றையரில் இத்தொடரின் ‘நம்பர்–5’, உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்வி கன்னா, 99 வது இடத்தி லுள்ள, இத்தொடரின் ‘நம்பர்-2' வீராங்கனை, எகிப்தின் மென்னா வாலித்தை எதிர்கொண்டார்.இதில் சிறப்பாக செயல்பட்ட தான்வி, 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 114வது இடத்திலுள்ள மலேசிய வீராங்கனை கோ ஜி ஜூவானை சந்திக்க உள்ளார்.இந்தியாவின் அஞ்சலி, மலேசியாவின் கோ ஜி ஜுவானிடம் 1-3 மற்றொரு காலிறுதியில் என தோல்வியடைந்தார்.இந்தியாவின் பூஜா ஆர்த்தி, எகிப்தின் நுார் ககபியிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சுராஜ் குமார், திவாகர் சிங், ஆர்யவீர், சந்தேஷ் ரிவிகுமார், சுற்றில் இரண்டாவது  முறை தோல்வியடைந்தனர்.  

Aug 06, 2025

தரவரிசையில் 'நம்பர்-7 டேபிள் டென்னிஸ் மனுஷ்-தியா ஜோடி.

புதிய தரவரிசை பட்டியல் சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் வெளியானது. கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஜோடி,2065 புள்ளி பெற்று 3 இடம் முன்னேறி,7 வது இடம் பெற்றது.இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஜோடி,2205 புள்ளியுடன் 3 இடம் முன்னேறிஆண்கள் இரட்டையரில்,7வது இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் பிரேசிலில் நடந்த வேர்ல்டு கன்டெண்டர் தொடரில் இரு பிரிவிலும் இந்திய ஜோடி பைனலுக்கு முன்னேறின. உலகத் தரவரிசையில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முன்னேற்றம் கிடைத்தது.  அதிகபட்சம் 43வது இடம்ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் மானவ் தக்கார்,  பிடித்தார்.இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா,10 இடம் பின் தங்கி,பெண்கள் ஒற்றையரில் 47வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் சிறந்த இடம் பெற்ற இந்திய வீராங்கனையாக உள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா (52), யாஷஸ்வினி (76) பின் தங்கினர்.

1 2 ... 83 84 85 86 87 88 89 ... 136 137

AD's



More News