25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி .

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்கின்றன.நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதில் கூப்பர் கொனாலி, தன்வீர் சங்கா இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 264 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. துவக்கத்தில் திணறிய இந்திய அணி சுப்மன் கில் (8) ஏமாற் றினார். இரண்டு முறை 'கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய கேப்டன் ரோகித் சர்மா (28), கொனாலி வலையில் சிக்கினார். இந்தியா 8 ஓவரில் 42/2 ரன் எடுத்தது.  கோலி, ஸ்ரேயாஸ் சேர்ந்து , 'ரிஸ்க்' எடுக்காமல் அழகாக ரன் சேர்த்தனர். ஜாம்பா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோலி 53 பந்தில், ஒருநாள் அரங்கில் 74வது அரைசதம் எட்டினார்.

கடைசி கட்டத்தில் ராகுல், ஹர்திக் பாண்ட்யா மிரட்டினர். ஜாம்பா ஓவரில் வரிசையாக இரண்டு இமாலய சிக்சர் விளாசிய பாண்ட்யா பதட்டத்தை தணித்தார். பாண்ட்யா28 ரன் எடுத்தார். மேக்ஸ் வெல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராகுல், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.1ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News