25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Aug 06, 2025

துாரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் இந்தியன் ஆர்மி வெற்றி.

துாரந்த் கோப்பை இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடரின் 134 வது சீசன் தற்போது நடக்கிறது. 24 அணிகள், 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் மொத்தம் முறையில் போட்டி நடக்கின்றன.ஜாம்ஷெட்பூரில்நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் இந்தியன் போட்டியில்ஆர்மி அணி, நேபாளத்தை சேர்ந்த திரிபுவன் ஆர்மி அணிகள் மோதின. போட்டியின் 27வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் கமேய், ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்தியன் ஆர்மி அணி 1/0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'சி' பிரிவில் 3 புள்ளி யுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஜாம்ஷெட்பூர் (6 புள்ளி) அணி உள்ளது. 

Aug 06, 2025

கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடர் மூன்றாவது சீசன் சென்னையில் இன்று துவங்குகிறது.

AUGUST 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் முன்னணி வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, விதிக் குஜ்ராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் உட்பட 10 பேர் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கின்றனர். சர்வதேச தரவரிசையில் 2776 புள்ளியுடன், 6வது இடத்திலுள்ள அர்ஜுன், கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இதில் சாதிக்கும் வீரருக்கு ரூ. 25 லட்சம், 2, 3வது இடம் பெற்றால் ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம் பரிசு கிடைக்கும். தவிர, சாம்பியன் வீரர், 'பிடே' தரவரிசையில் 24.5 புள்ளி பெறலாம். இதனால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக சாம்பியன் ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) வாய்ப்பை பங்கேற்கும் அதிகரிக்கலாம்.,'சாலஞ்சர்' பிரிவில் இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் திறமை வெளிப்படுத்தும்வகையில் போட்டி நடக்க உள்ளன. இதில் கார்த்திகேயன் முரளி, லியோன் மென்யன், அபிமன்யு, ஆர் இனியன், டோன்கா, பிரனேஷ்  அதிபன் பாஸ்கரன் என முன்னணி வீரர்களுடன், இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா  களமிறங்க உள்ளனர். 

Aug 05, 2025

(ஆண்டர்சன் சச்சின் டிராபி) டெஸ்ட் தொடரில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன் சச்சின் டிராபி)  இங்கிலாந்து சென்ற இந்திய அணி பங்கேற்ற,ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்,. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 396 எடுத்தது. இங்கிலாந்துக்கு 374  ரன்னை  வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 367 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 57 நிமிடங்களில் இங்கிலாந்தின் எஞ்சிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி வெற்றியை 2/2 என சமன் செய்தனர் . கோப்பையைஇரு அணிகளும் பகிர்ந்து கொண்டனர். மொத்தம் 9 விக்கெட்(4+5)வீழ்த்திய சிராஜ், ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரில் அதிக ரன்குவித்த பேட்டர் வரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், 4 சதம் உட்பட 754 ரன்எடுத்தார். 'வேகத்தில்' மிரட்டிய முகமது சிராஜ், வெற்றிக்கு கைகொடுத்தார்.

Aug 04, 2025

டேபிள் டென்னிஸ் இந்தியா சாதனை

டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர்பிரேசிலில் ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் 'நம்பர்-1'  மனுஷ் ஷா, மானவ் தக்கார் ஜோடி, 3-2 என்ற செட்கணக்கில் (5-11, 11-9, 11-6, 8-11, 11-5) தென் கொரியாவின் ஹுவான் செங், குவான் ஹாங்ஜோடியை வென்று, பைனலுக்கு  முன்னேறியது.இந்தியாவின் தியா, மனுஷ் ஜோடி, கலப்பு இரட்டையர் அரையிறுதியில், 3-0 என (11-7, 11–2, 11–7) சிலியின் நிகோலஸ், பவுலினா  ஜோடியை வென்று பைனலுக்குள் நுழைந்தது.இந்தியா முதன் முறையாக உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர்  தொடரில் பைனலுக்கு முன்னேறியதுஇந்தியா முதன் முறையாக உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர்  தொடரில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பைனலுக்கு முன்னேறியது.பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சக வீராங்கனை தியாவை 3-1  என (11-9, 9-11, 11-9, 15-13) என வென்றார். ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிசில் ,மானவ்-மனுஷ் 2வது இடம், ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா,டாங் கியு ஜோடியை சந்தித்தது. இதில் மானவ், மனுஷ் ஜோடி 2-3 (3-11, 11-7, 7-11, 15-13, 5-11) என்ற கணக்கில் போராடி  தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஜப்பானின் ஹோனோகா  ஹஷிமோட்டோ மோதினர். இதில்  ஏமாற்றிய மணிகா 0-3 (7-11, 6-11, 7-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

Aug 04, 2025

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் .

சிங்கப்பூரில், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில், பெண்கள் தனிநபர் 400 மீ., 'மெட்லே' பிரிவு பைனலில் இலக்கை 4 நிமிடம், 25.78 வினாடியில் கடந்த, கனடாவின் சம்மர் மெக்கின்டோஷ் தங்கம் வென்றார். இது, இம் முறை இவர் கைப்பற்றிய 4வது தங்கம், 5 வது பதக்கம் ஆனது.மார்ச்சந்த் 'தங்கம்'ஆண்கள் தனிநபர் 400மீ., 'மெட்லே' பிரிவு பைனலில், பிரான்சின் லியோன் மார்ச்சந்த் (4 நிமிடம், 04.73 வினாடி) பிடித்து முதலிடம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.  அமெரிக்கா சாதனைபெண்களுக்கான 4x100 'மெட்லே ரிலே' பைனலில் அசத்திய ரீகன் ஸ்மித், கேட் டக்ளாஸ், கிரெட்சன் வால்ஷ், டோரி ஹஸ்கே அடங்கிய அமெரிக்க அணி, பந்தய துாரத்தை 3 நிமிடம், 49.34 வினாடியில் கடந்து தங்கம் வென்றது. 

Aug 04, 2025

சர்வதேச தடகள போட்டி.

  சர்வதேச தடகள போட்டி  கஜகஸ்தானில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 7.94 மீ., தாண்டிய இவர், அடுத்த 5 வாய்ப்புகளில் 7.73, 7.58, 7.57, 7.80, 7.79 மீ., தாண்டினார். அதிகபட்சமாக 7.94 மீ., தாண்டிய முரளி ஸ்ரீசங்கர், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார் சென்றார்.

Aug 04, 2025

'ஆண்டர்சன் சச்சின் டிராபி' கிரிக்கெட்  டெஸ்ட்

ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி,  பங்கேற்று, நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1,2 எனபின் தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்எடுத்தன. இரண்டாவது நாள்முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில்  396 ரன்னில் ஆல் அவுட் டானது. இரண்டாவது இன்னிங்சில் 374 ரன்எடுத்தால் வெற்றி எனகளமிறங்கியது இங்கிலாந்து அணி. 3rd AUGUST தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 339/6 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  இன்று பவுலர்கள் அசத்தினால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம்.  

Aug 04, 2025

கிரீசில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்(17 வயது)கிரீசில்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் ,61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் யாஷிதா, அமெரிக்காவின் டயானா ரோஸ் மோதினர். இதில் யாஷிதா 0-11 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.  10 எடைபிரிவுகளில், இந்தியா 2 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம் என மொத்தம் 6பதக்கம் கைப்பற்றியது. 151 புள்ளி எடுத்து இந்திய பெண்கள் அணி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.கடந்த ஆண்டு இந்திய முதன் பெண்கள் அணிமுறையாக(5தங்கம்,1 வெள்ளி,2 வெண்கலம்) சாம்பியன்பட்டம் வென்று சாதனை படைத்து இருந்தது.

Aug 02, 2025

இந்திய பெண்கள் உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், பதக்கங்கள் வென்றனர்.

.உலக மல்யுத்த சாம்பியன் ஷிப்(17 வயது)கிரீசில் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 43 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரச்சனா, சீனாவின் ஜின் ஹுவாங்கை. ரச்சனா 3,0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் அஷ்வினி,65கிலோபைனலில்3,0எனஉஸ்பெகிஸ்தானின் ராஹிம்ஜொனாவாவை வெற்றி பெற்று ,தங்கப்பதக்கம் வென்றார்.இந்திய வீராங்கனை காஜல்,73 கிலோ பைனலில்5,8 என சீனாவின் வென்ஜினிடம் தோற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தியாவின் மோனி 57 கிலோ பைனலில் 5,6 என கஜகஸ்தானின் உஸ்மனோவாவிடம் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் கோமல் , 49 கிலோ பிரிவில், 8-3 என மங்கோலியாவின் அன்ஹெலினாவை, வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.  

Aug 02, 2025

நேபாள தலைநகர் காத்மாண்டுவில், உலக டேபிள் டென்னிஸ் இந்திய அணிகள் தகுதி

அணிகளுக்கு இடையிலான தெற்காசிய ரீஜினல் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், இலங்கை, வங்கதேசம் என 5 அணிகள் பங்கேற்றன.இந்திய அணி, ஆண்கள் பிரிவில் தனது முதல் போட்டியில் 3,0 என்ற கணக்கில் வங்க தேசத்தை வீழ்த்தியது. அடுத்து நடந்த போட்டிகளில் இலங்கை(3,0), நேபாளம்(3,0), மாலத்தீவு(3,0) அணிகளை வென்றது. நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 8 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியது. அடுத்த ஆண்டு (ஏப். 28 - மே 10) லண்டனில் நடக்கவுள்ள உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றிய இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள்,  விளையாடும் வாய்ப்பை பெற்றன. 

1 2 ... 84 85 86 87 88 89 90 ... 136 137

AD's