கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் ஹரிகா-பிரனேஷ், அதிபன் வெற்றி.
கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் சென்னையில், சாலஞ்சர்ஸ் பிரிவில் 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர்.நேற்று ஆறாவது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ஹரிகாவைஷாலி மோதினர். ஹரிகா,80வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் அபிமன்யு புரானிக், பிரனேஷை சந்தித்தார். தொடர்ச்சியாக 4 வெற்றி பெற்ற அபிமன்யு, இம்முறை46வது நகர்த்தலில் தோல்வி யடைந்தார். அதிபன்பாஸ்கரன், திப்தயனை வென்றார். 4.5 புள்ளியுடன் பிரனேஷ் முதலிடத்துக்கு முன்னேறினார். அபிமன்யு (4.5 புள்ளி, 4 வெற்றி, 1 தோல்வி, 1 'டிரா') அடுத்து உள்ளார்.
இந்தியாவின் அர்ஜூன், மாஸ்டர்ஸ் பிரிவில், ஜெர்மனியின் வின்சென்ட்டை எதிர் கொண்டார்.
0
Leave a Reply