25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அயலான்  இன்று12ம் தேதி ரிலீஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அயலான்  இன்று12ம் தேதி ரிலீஸ்

 சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் 12ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் 5 ஆண்டுகள் இடைவேளைக்குப் பின்னர் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட அயலான் பல தடைகள் காரணமாக ட்ராப் ஆகும் நிலைக்குச் சென்றது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அயலான் படத்தை விட்டுவிடாமல் சிவகார்த்திகேயனும் ரவிக்குமாரும் பார்த்துக்கொண்டனர். அதற்கு பலனாக அயலான் 12ம் தேதி ரிலீஸாகிறது.
பொங்கல் ரேஸில் களமிறங்கும் அயலானுக்குப் போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் படமும் ரிலீஸாகிறது. இதனால் தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையேயான போட்டியாக இது பார்க்கப்படுகிறது. அயலான் ட்ரெய்லரை தொடர்ந்து கேப்டன் மில்லர் ட்ரெய்லரும் மறு நாளே வெளியானது. ஆனால், கேப்டன் மில்லருக்கு சென்சாரில் UA சர்டிபிகேட் கிடைத்துள்ளது. அதேநேரம் அயலான் படத்துக்கு U சான்றிதழ் கிடைத்துள்ளதால் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அயலான் படத்தின் ரிலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. இந்த தொகையை ஏற்றுக்கொண்ட கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் 3 கோடி ரூபாயை மட்டுமே திருப்பி செலுத்தியது. மீதித் தொகையை திருப்பிக் கொடுக்காததால் அயலான் ரிலீஸுக்கு சென்னை நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த பிரச்சினைகள் இன்றோடு முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு  பணம் செட்டில் செய்யப்படவிருப்பதால் அயலான் ரிலீஸில் பிரச்சினை இல்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து படத்தை ப்ரொமோஷன் செய்வதற்காக ஸ்பெஷல் ஷோ ஒன்றை திரையிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். இதில் உதயநிதியும் கலந்துகொண்டு அயலான் படத்தை பார்க்கவுள்ளாராம்.அவருடன் மேலும் பல சினிமா நட்சத்திரங்கள் அயலான் படத்தை பார்க்கவுள்ளனர். அவர்களது பாசிட்டிவான விமர்சனங்களை அயலான் படத்தின் ப்ரொமோஷனில் பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் இந்த பொங்கல் ரேஸில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் இரண்டில் எது வெற்றி பெறும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News