25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகள்.

  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குப் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில், தற்போது தாட்கோ மற்றும் முன்னணி தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு *அழகுக்கலை* (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் *சிகை அலங்காரம்* (Diploma in Creative Hair Dressing Chemical Treatment Courses) ஆகிய பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார். 

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:          

 இனம்: விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.           

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பில் (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.           

வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.           

குடும்ப வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் *ரூ.3.00 லட்சத்திற்குள்* இருக்க வேண்டும். 

பயிற்சியின் விவரங்கள்:        கால அளவு: 45 நாட்கள்.            

 பயிற்சி மையம்: இப்பயிற்சிகள் *திருச்சி மாவட்டத்தில்* நடைபெற உள்ளன.            

 தங்கும் வசதி: தேர்வு செய்யப்படும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கிப் படிப்பதற்கான முழுச் செலவினத்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். 

வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம்:       இப்பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாகச் சுமார் *ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை* வருவாய் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். 

விண்ணப்பிக்கும் முறை    இப்பயிற்சியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், தாட்கோ இணையதளம் (www.tahdco.com) வழியாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News