25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


போப் ஆண்டவர், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர் மரணமடைந்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போப் ஆண்டவர், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர் மரணமடைந்தார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி, போப் ஆண்டவராக பொறுப்பேற்று தனது பெயரை "போப்" பிரான்சிஸ்" என்று மாற்றிக் கொண்டார். 12 ஆண்டுகள் போப் பதவியில் இருந்த அவர் , தனது 89 வது வயதில்  (போப் பிரான்சிஸ் 1936 - 2025 )உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 

 போப் ஆண்டவர். உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர். ரோம் நகர போப், புனித பீட்டரின் வாரிசு, வாடிகன் நகர தலைவர் என்ற பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர்.போப் ஆண்டவருக்கு போன்டிபெக்ஸ் மேக்சிமஸ் என்ற பட்டமும் உண்டு. இது "மிக உயர்ந்த பூசாரி" என்று பொருள்படும்.

மனித நேயம் மிக்க மறைந்த போப் பிரான்சிஸ், ஒரு மதத்தின் தலைவராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். அவரது மரணம் உலகத்திற்கே மாபெரும் ஓர் இழப்பாகும். அனைத்து நாடுகளிலும் அவருக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. 

போப் என்பது லத்தீன் மொழியில்  பொருள் தந்தை ,பப்பா என்ற சொல்லில் இருந்து உருவானது.. ஒரு போப் ஆண்டவர், தான் விரும்பி ராஜினாமா செய்யும் வரையும், மரணம் அடையும் வரையும் அந்த பதவியில் இருக்கலாம். அவரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News