25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

Sep 02, 2022

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில்  நேச்சர் கிளப் தொடக்க விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில்  நேச்சர் கிளப் தொடக்க விழா (Nature Club Inauguration) பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு. சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) கலந்து  கொண்டு சிறப்பு செய்தார். பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று  விருந்தினரை அறிமுகம் செய்ய, தாளாளர் திருமதி.ஆனந்தி  அவருக்கு பரிசுகள் வழங்கி கெளரவம் செய்தார்.சிறப்பு விருந்தினர் தமது உரையில் சிறு  வயதில் தாங்கள் கேட்டு ரசித்த இயற்கையைப் பற்றிய பாடல்கள் தற்பொழுது  திரைப்படங்களில் இடம் பெறவில்லை என்றும்  மாடுகள் நிறக் குருடானவை, பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் நினைவாற்றல் கிடையாது ,பழிவாங்கும் உணர்ச்சி அவைகளுக்கு கிடையாது, மனிதர்களுக்கு மட்டுமே  உண்டு என்றும் கூறினார்.மேலும், இயற்கையின் படைப்புகளான காட்டு விலங்குகள் தனக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை பிற உயிரினங்களுக்கு விட்டுவிடும் தன்மை கொண்டவை. ஆனால் மனிதர்களாகிய நாம் விலங்குகளின் இருப்பிடங்களை  ஆக்கிரமிப்பு செய்து விட்டு  அவைகள் ஊருக்குள் புகுந்துவிட்டன என்று கூறிக் கொண்டிருக்கிறோம் என்பதையும்,தென்னிந்திய மக்களுக்கு வற்றாத ஜீவநதியாக  மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது, அவற்றைப் பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தமிழ்நாட்டில் அதிக மழை பொழியும் இடம் தேவாரம் , உயிர் வாழ தேவையான ஆக்ஸிஜனை நமக்குத் தருவதில் கடல் முக்கிய பங்கு வகிக்கிறது,  துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்,  நாம் பயன்படுத்தக் கூடியப் பொருட்கள் மறு சுழற்சிக்கு ஏற்றவாறு  இருக்க வேண்டும் என்றும் Refuse, Reduce, Reuse, Recycle என்ற கொள்கையினை அனைவரும் கடைபிடித்தால் இயற்கையை பாதுகாக்கலாம் என்பதை மாணவர்களுக்கு அழகாக எடுத்துக் கூறினார்.நிகழ்ச்சியில் மாணவர்கள் இயற்கை பற்றிய சேர்ந்திசைப் பாடல் பாடினர். உலக யானைகள் தினத்தன்று நடைபெற்றஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார். நிகழ்வில் பல்வேறு  அமைப்புகளைச் சார்ந்த இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திரு.வெங்கடபெருமாள் மற்றும் ஆசிரியர்கள்  செய்திருந்தனர்.

Aug 27, 2022

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நா்சரி&பிரைமரி பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவா்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நா்சரி&பிரைமரி பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குபள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவா்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.பள்ளி மாணவா்களுக்கு 75வது சுதந்திர தினத்தையொட்டி இதயம் TV, Champion-2022 என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.அதில் ஆனந்தா வித்யாலயா நா்சரி&பிரைமரி பள்ளி மாணவா்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.ஓவியப் போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் M. தமிழ் இனியன் முதல் பரிசையும் மாறுவேடப் போட்டியில் முதலாம் வகுப்பு மாணவி V. சுபிக்‌ஷா ஶ்ரீ இரண்டாம் பரிசையும் பெற்றனா்.மேலும் குழு நடனப் போட்டியில் பள்ளி மாணவிகள் இரண்டாம்பரிசையும் ஜுனியா் அளவில் கலந்து கொண்ட பதினாறு பள்ளிகளில் இவ்வருடத்திற்கான Champion -2022 என்ற முதல் பரிசை ஆனந்தா வித்யாலயா நா்சரி&பிரைமரி பள்ளி பெற்று சிறப்படைந்தது.மேலும் குற்றாலம் பாரத் மாண்டிசோரி பள்ளி நடத்திய Pegasus -2022 என்றபோட்டியில் இரண்டாம் வகுப்பு மாணவன் A.R. அஸ்வின் Stand up comedian என்ற நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தான்.பள்ளித் தலைமையாசிரியை திருமதி. ஜெய பவானி அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்ட விழா இனிதே நிறைவடைந்தது.

Aug 25, 2022

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.இதயம் TV, Champion 2022 என்னும் தலைப்பில், பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதில்  மாணவர்கள் பல போட்டிகளில் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். பேச்சரங்கப் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவர் G. தமிழ்குமரன் முதல் பரிசையும், குழு நடனத்தில் மாணவிகள் மூன்றாம் பரிசையும் மற்றும் ஆடை அழகு போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி G. தமிழ் ஓவியா ஆறுதல் பரிசையும் பெற்றனர்.மேலும் குற்றாலம் பாரத் மாண்டிசோரி பள்ளி நடத்திய  Pegasus 2022 போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவன் G.தமிழ்குமரன் - Voice out  நிகழ்ச்சியில் முதலிடத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.  வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி , முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 

Aug 15, 2022

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக  டாக்டர். இராதா அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றினார்.  பள்ளி முதல்வர்  திரு. கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்க, தாளாளர் விருந்தினரை  கெளரவம் செய்தார். நிகழ்ச்சிக்கு இராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதி சுமதி அவர்களும், ஆத்ம பிரசார உறுப்பினர் திரு. இராஜேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.டாக்டர்.இராதா அவர்கள் மாணவர்களுக்கு ஆற்றிய சிறப்புரையில் மாணவர்களுக்கு கற்றலின் மேன்மையை 'கற்க கசடற' என்ற திருக்குறளின் மூலம் மேற்கோள் காட்டினார். திருக்குறளில் அனைத்து வாழ்வியல் நெறிகளும்  அடங்கியுள்ளது என்று கூறினார். இன்றைய மாணவர்களின் மன அழுத்தத்திற்கான காரணம் அலைபேசியில் பேசுவதும், விளையாடுவதுமே.  இவற்றிலிருந்து விடுபட அவர்கள் தங்களுக்கு இடையே நேரடியான பகிர்தலையும், பழகுதலையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.பின்பு நீதிபதி சுமதி அவர்கள் ஆற்றிய உரையில் தமது பள்ளி நாட்களை நினைவு கூறினார். அகரம் எல்லா எழுத்துக்களுக்கு எப்படி முதன்மையாக இருக்கிறதோ அது போல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து வாழ்வியல் நெறிகளுக்கு அடிப்படையாக உள்ளது என்று கூறினார். திரு.இராஜேஷ் அவர்கள் தனது உரையில் நாடு எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அதற்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தமது திறமைகளை  மிக அழகாக வெளிப்படுத்தினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெங்கடபெருமாள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.  ஆசிரியை ஜெகதீஸ்வரி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. 

Aug 11, 2022

ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் சார்பாக இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் சார்பாக இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி பள்ளித் தாளாளர் ஸ்ரீமதி. ஆனந்தி அவர்கள் முன்னிலையில்  சிறப்பாக  நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக Rtn.ராமனாதன் அவர்கள் கலந்து கொண்டார். Rtn. குமார் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்க, பள்ளி முதல்வர் புதிதாக பொறுப்பு ஏற்கவிருக்கும் மாணவர்களை அறிமுகம் செய்தார். பள்ளித் தாளாளர் விருந்தினர் களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் இண்ட்ராக்ட் கிளப் தலைவராக மாணவர் T.தவச்செல்வன் மற்றும் செயலாளராக மாணவி J.பிரிட்டீனா பிளஸ்சி பதவி ஏற்றுக் கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் Rtn. வெங்கடபெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். Rtn. ராமனாதன் அவர்கள் தமது உரையில், மாணவர்கள் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நம்பிக்கைக்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டு களுடன் விளக்கினார். மேலும் மாணவர்கள் Passion, Practice, Patience மற்றும் Persistance  போன்ற குணநலன்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்,  மற்றும் Rtn. Dr.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்க ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திரு. காளிதாஸ் நன்றியுரை கூற  தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். 

Jul 30, 2022

தேசிய அந்துப் பூச்சி வார விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28.7.22 அன்று தேசிய அந்துப் பூச்சி வார விழா சிறப்பாக நடைபெற்றது.சூழலியலை சமன்படுத்துவதில் முக்கிய பங்கு வசிக்கும் அந்துப்பூச்சிகளைப் பற்றி அறிந்தவர்கள் அதிகம் இல்லை. அந்துப் பூச்சிகளை தெரிந்து கொள்வதற்கும், மக்களை ஊக்குவிப்பதற்கும், அவற்றைப் பற்றிய தரவுகளை சேகரிக்கவும், ஆய்வு செய்யவும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் விதமாக ROAR மற்றும் WAR அமைப்பினைச் சார்ந்த சரண்  மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அவர்களது பங்கு ஆதாரமாகவும், உறுதுணையாகவும் இருந்தது.இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி, முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் திரு.வெங்கடபெருமாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Jul 28, 2022

அறிவியல் செயல்முறை விளக்கம்

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டி மற்றும் Interact Club of ஆனந்தா வித்யாலயா இணைந்து மாணவர்களின்அறிவியல் திறமையை வளர்த்துக் கொள்ளவும், அறிவியல் கண்டுபிடிப்புகளை எளிதாகப் புரிந்து கொள்ளவும், அறிவியல் செயல்முறை விளக்கத்தை தெரிந்து கொள்ளவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமை வகிக்க ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் முன்னாள் தலைவர் ஆனந்தா விலாஸ் அதிபர் திரு.பீமானந்த் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.     நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார். அவர் மாணவர்களுக்கு ஒளி ஒலியின் வேகம், லேசர் விளக்கு செயல்படும் முறை, திண்டல் விளைவு, காற்றுக்கும் எடை உண்டு என்பதை விளக்கும் செயல்பாடு பல்வேறு வேதியியல் சூத்திரங்களின் அறிவியல் உண்மைகள், எரியும் நெருப்பு போன்ற  செயல்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் அழகாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும், ஆச்சரியத்தோடும் கண்டு களித்தனர்.நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் தலைவர் திரு. குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் திரு. வெங்கடபெருமாள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Jul 19, 2022

காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவர்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள் தொடர்பாக விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றார்.நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.ஜூலை 15 ல்கல்வி வளர்ச்சி நாள் நம் பள்ளியில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு நான் அறிந்த காமராஜர் என்னும் தலைப்பில் உரையாற்றினார். 

Jul 16, 2022

கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்றங்களின் தொடக்க விழா

ஆனந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கல்விவளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்றங்களின் தொடக்க விழா நிகழ்ச்சி இன்றுசிறப்பாக நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக திரு எம் ஆர் வெங்கட நாராயணராஜா அவர்கள் கலந்து கொண்டார் .பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள்தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவி சுதர்சனாவரவேற்புரை ஆற்ற பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். விருந்தினருக்கு பள்ளி தாளாளர்திருமதி ஆனந்தி அவர்கள் பரிசு வழங்கி கௌரவம் செய்தார்.சிறப்பு விருந்தினர் தனது உரையில் காமராஜர் அறிமுகப்படுத்திய மதியஉணவுத் திட்டத்தினை பற்றியும்,ஒரு கிங்மேக்கர் ஆக அவர் செயல்பட்ட விதத்தை பற்றியும் ,நம் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக பணிபுரிந்தநிகழ்வுகளையும் எடுத்துக் கூறினார் .மேலும் பாரத ரத்னா விருது பெற்ற காமராஜரின் ஆட்சிக் காலத்தில் என்னென்ன தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன ,எந்தெந்த அணைக்கட்டுகள் கட்டப்பட்டன என்பதை குழந்தைகளுக்கு கேள்வி பதில் மூலம் கேட்டு உரையாற்றினார்.ராஜபாளையத்தில் பிறந்த முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பி எஸ் குமாரசாமி ராஜா அவர்களின் சேவைகளையும் பள்ளி நிறுவனர் திரு பீமராஜாவின் கனவை நிறைவேற்றும் படியாக மாணவர்கள் எதிர்காலத்தில்உருவாக வேண்டும் என்பதையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்கலந்து கொண்டு வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்ட மாணவன் தமிழக்குமரனுக்கு தாளாளர் சிறப்பு பரிசு வழங்கிகௌரவம் செய்தார். மாணவர்களின் தனிப்பாடல் ,உரை வீச்சு, சேர்ந்திசை பாடல் ,நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கடந்த கல்வியாண்டில்நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வைத்த ஆசிரியர்களையும் சிறப்பு செய்யும் விதமாக பள்ளிச் தாளாளர் கௌரவம் செய்தார். மாணவன் தருண்குமார் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

Jun 28, 2022

உலக யோகா தின விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தின விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக வாழும் கலை அமைப்பின் உறுப்பினர்களான  ஆசிரியர் சுகந்தி மற்றும் திருமதி. விஜயலட்சுமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் வரவேற்புரை ஆற்றி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றார் திருமூலர். உடல்நலத்திற்கு பெரும் பங்கு வகிப்பது யோகக் கலை ஆகும். உடல், மனம், உணர்வு ஆகிய ஒற்றைப் புள்ளியில் பயணிப்பதே யோகா என்றும் அத்தகைய யோகக் கலைகளான கபாலபதி, நாடி சுத்தி, பிராணாயாமம் போன்ற யோக கலைகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார்.மேலும் உளியால் அடிவாங்கிய கல் தான் கோயில் கர்ப்பகிரகத்தில் ஒளிர்கின்றன. அதைப்போல மாணவர்களும் வலி என்பது தன்னை வளப்படுத்தவே என உணர வேண்டும் என்று  கூறியும் யோகா தினத்தை  தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் கொண்டாடினர்.  

1 2 3 4 5 6

AD's



More News