ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக டாக்டர். இராதா அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றினார். பள்ளி முதல்வர் திரு. கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்க, தாளாளர் விருந்தினரை கெளரவம் செய்தார். நிகழ்ச்சிக்கு இராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதி சுமதி அவர்களும், ஆத்ம பிரசார உறுப்பினர் திரு. இராஜேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.
டாக்டர்.இராதா அவர்கள் மாணவர்களுக்கு ஆற்றிய சிறப்புரையில் மாணவர்களுக்கு கற்றலின் மேன்மையை 'கற்க கசடற' என்ற திருக்குறளின் மூலம் மேற்கோள் காட்டினார். திருக்குறளில் அனைத்து வாழ்வியல் நெறிகளும் அடங்கியுள்ளது என்று கூறினார். இன்றைய மாணவர்களின் மன அழுத்தத்திற்கான காரணம் அலைபேசியில் பேசுவதும், விளையாடுவதுமே. இவற்றிலிருந்து விடுபட அவர்கள் தங்களுக்கு இடையே நேரடியான பகிர்தலையும், பழகுதலையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.பின்பு நீதிபதி சுமதி அவர்கள் ஆற்றிய உரையில் தமது பள்ளி நாட்களை நினைவு கூறினார். அகரம் எல்லா எழுத்துக்களுக்கு எப்படி முதன்மையாக இருக்கிறதோ அது போல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து வாழ்வியல் நெறிகளுக்கு அடிப்படையாக உள்ளது என்று கூறினார். திரு.இராஜேஷ் அவர்கள் தனது உரையில் நாடு எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அதற்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தமது திறமைகளை மிக அழகாக வெளிப்படுத்தினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெங்கடபெருமாள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஆசிரியை ஜெகதீஸ்வரி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.
0
Leave a Reply