அறிவியல் செயல்முறை விளக்கம்
ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டி மற்றும் Interact Club of ஆனந்தா வித்யாலயா இணைந்து மாணவர்களின்அறிவியல் திறமையை வளர்த்துக் கொள்ளவும், அறிவியல் கண்டுபிடிப்புகளை எளிதாகப் புரிந்து கொள்ளவும், அறிவியல் செயல்முறை விளக்கத்தை தெரிந்து கொள்ளவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமை வகிக்க ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் முன்னாள் தலைவர் ஆனந்தா விலாஸ் அதிபர் திரு.பீமானந்த் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு. நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார். அவர் மாணவர்களுக்கு ஒளி ஒலியின் வேகம், லேசர் விளக்கு செயல்படும் முறை, திண்டல் விளைவு, காற்றுக்கும் எடை உண்டு என்பதை விளக்கும் செயல்பாடு பல்வேறு வேதியியல் சூத்திரங்களின் அறிவியல் உண்மைகள், எரியும் நெருப்பு போன்ற செயல்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் அழகாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும், ஆச்சரியத்தோடும் கண்டு களித்தனர்.நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் தலைவர் திரு. குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் திரு. வெங்கடபெருமாள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0
Leave a Reply