கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்றங்களின் தொடக்க விழா
ஆனந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கல்விவளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்றங்களின் தொடக்க விழா நிகழ்ச்சி இன்றுசிறப்பாக நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக திரு எம் ஆர் வெங்கட நாராயணராஜா அவர்கள் கலந்து கொண்டார் .பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள்தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவி சுதர்சனாவரவேற்புரை ஆற்ற பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். விருந்தினருக்கு பள்ளி தாளாளர்திருமதி ஆனந்தி அவர்கள் பரிசு வழங்கி கௌரவம் செய்தார்.சிறப்பு விருந்தினர் தனது உரையில் காமராஜர் அறிமுகப்படுத்திய மதியஉணவுத் திட்டத்தினை பற்றியும்,ஒரு கிங்மேக்கர் ஆக அவர் செயல்பட்ட விதத்தை பற்றியும் ,நம் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக பணிபுரிந்தநிகழ்வுகளையும் எடுத்துக் கூறினார் .மேலும் பாரத ரத்னா விருது பெற்ற காமராஜரின் ஆட்சிக் காலத்தில் என்னென்ன தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன ,எந்தெந்த அணைக்கட்டுகள் கட்டப்பட்டன என்பதை குழந்தைகளுக்கு கேள்வி பதில் மூலம் கேட்டு உரையாற்றினார்.ராஜபாளையத்தில் பிறந்த முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பி எஸ் குமாரசாமி ராஜா அவர்களின் சேவைகளையும் பள்ளி நிறுவனர் திரு பீமராஜாவின் கனவை நிறைவேற்றும் படியாக மாணவர்கள் எதிர்காலத்தில்உருவாக வேண்டும் என்பதையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
கலந்து கொண்டு வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்ட மாணவன் தமிழக்குமரனுக்கு தாளாளர் சிறப்பு பரிசு வழங்கிகௌரவம் செய்தார். மாணவர்களின் தனிப்பாடல் ,உரை வீச்சு, சேர்ந்திசை பாடல் ,நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கடந்த கல்வியாண்டில்நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வைத்த ஆசிரியர்களையும் சிறப்பு செய்யும் விதமாக பள்ளிச் தாளாளர் கௌரவம் செய்தார். மாணவன் தருண்குமார் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
0
Leave a Reply