தொடர் விபத்துக்கு உள்ளாகி வரும் சத்திரப்பட்டி ரோடு
ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அடுத்த சத்திரப்பட்டி ரோட்டில் இருந்து கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அதிகம். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்லும் இப்பகுதியின் போக்குவரத்து நெரிசல் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் இந்த ரோட்டை அகலப் படுத்தியதுடன் வாகனங்கள் முந்துவதை தவிர்க்க மேம்பாலம் அடுத்த பகுதியில் இருந்து பொன்னகரம் நுழைவு பகுதி வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், ஆக்கிரமிப்பு, சென்டர் மீடியன் பகுதிகளில் வாகன ஒட்டிகள் காணும் விதமான ரிப்லக்டர் இல்லாதது, மரக்கிளைகள் ரோடு வரை படர்ந்து வாகனங்கள் ஒதுங்க முடியாது, , சென்டர் மீடியன் அருகே மணல் குவிந்துள்ளது போன்ற பல சிக்கல்களால் இப்பகுதி வாகன ஒட்டிகள் தொடர் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நெடுஞ்சாலை துறையினர் முறையாக பராமரிப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் கவனிப்பார்களா? இப் பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
0
Leave a Reply