நம்முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது வசம்பு
கிராமத்தில்உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடு படுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்னச் சின்ன தொற்று நோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது.இதனாலேயேஇது பிள்ளை வளர்ப்பான்என்று கூறப்படுகிறது. வசம்பை ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் என்று அழைப்பதுண்டு.
வசம்பு பொடி அரை ஸ்பூன் எடுத்து அருகம்புல் சாறு50 மில்லி சாற்றில் கலந்து30 நாட்கள் பருகி வர வேண்டும் திக்குவாய் தீரும்.சுடுதண்ணீர்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.வசம்பை தூள் செய்து ரெண்டு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும்.இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியை கொடுக்கவும் ,சோம்பலை நீக்கவும், வசம்பு பயன்படுகிறது.
அதிமதுரம் சிறிதளவு அதே அளவு வசம்பு சேர்த்து நசித்து ஒரு டம்ளர் நீரில் காய்ச்சி.20மில்லி காலை, மாலை இரண்டு நாள் பருக கொடுத்தால் குழந்தை காய்ச்சல் சரியாகும்.வசம்பு ஒரு அங்குல துண்டையும்,10 லவங்கத்தையும் அம்மியில் நசித்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதித்து ஆறியபின் காலை மாலை வேலைக்கு50 மில்லி பருக காலரா சரியாகும்.கோலி அளவு மஞ்சள், சிறிது வசம்பு,சிறிது கற்பூரம் மூன்றும் சேர்த்து அத்துடன் மருதோன்றி இலைகள், நெல்லிக்காய் இலைகள் சேர்த்து அரைத்து இரவில் கால் ஆணி மீது வைத்து கட்டி காலையில் எடுத்து விட வேண்டும். மூன்று நாட்கள் இது போல் செய்தால் கால் ஆணி குணமாகும்.துளசி செடியின் பூங்கொத்து, சுக்கு, திப்பிலி, வசம்பு இவற்றை தனித்தனியே தூளாக்கி சலித்து சம அளவு கலந்து ஒரு சிட்டிகை தூளை சர்க்கரை சேர்த்து காலை மாலை இரண்டு நாள் கொடுத்தால் கக்குவான் சரியாகும்.
0
Leave a Reply