உலக யோகா தின விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தின விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக வாழும் கலை அமைப்பின் உறுப்பினர்களான ஆசிரியர் சுகந்தி மற்றும் திருமதி. விஜயலட்சுமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் வரவேற்புரை ஆற்றி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றார் திருமூலர். உடல்நலத்திற்கு பெரும் பங்கு வகிப்பது யோகக் கலை ஆகும். உடல், மனம், உணர்வு ஆகிய ஒற்றைப் புள்ளியில் பயணிப்பதே யோகா என்றும் அத்தகைய யோகக் கலைகளான கபாலபதி, நாடி சுத்தி, பிராணாயாமம் போன்ற யோக கலைகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார்.
மேலும் உளியால் அடிவாங்கிய கல் தான் கோயில் கர்ப்பகிரகத்தில் ஒளிர்கின்றன. அதைப்போல மாணவர்களும் வலி என்பது தன்னை வளப்படுத்தவே என உணர வேண்டும் என்று கூறியும் யோகா தினத்தை தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் கொண்டாடினர்.
0
Leave a Reply