தேசிய அந்துப் பூச்சி வார விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28.7.22 அன்று தேசிய அந்துப் பூச்சி வார விழா சிறப்பாக நடைபெற்றது.
சூழலியலை சமன்படுத்துவதில் முக்கிய பங்கு வசிக்கும் அந்துப்பூச்சிகளைப் பற்றி அறிந்தவர்கள் அதிகம் இல்லை. அந்துப் பூச்சிகளை தெரிந்து கொள்வதற்கும், மக்களை ஊக்குவிப்பதற்கும், அவற்றைப் பற்றிய தரவுகளை சேகரிக்கவும், ஆய்வு செய்யவும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் விதமாக ROAR மற்றும் WAR அமைப்பினைச் சார்ந்த சரண் மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அவர்களது பங்கு ஆதாரமாகவும், உறுதுணையாகவும் இருந்தது.
இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி, முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் திரு.வெங்கடபெருமாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply