25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


அழகுக் குறிப்பு

Sep 22, 2025

உடலில் ஏற்படும் வெளுப்பு .

உடலில் ஏற்படும்வெளுப்பு மற்றும் தேமல் நோய் குணமாக சிறந்த மருத்துவகுணம் உள்ள வெள்ளை பூண்டை, வெற்றிலை சேர்த்து ,மசிய அரைத்து ,தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துக்குளித்து வர நல்ல மாற்றம் எற்படும்.பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில் காணும் தேமல் அகலும்.அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள் , மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும். இந்த நாயுருவி இலையானது எளிதாக கிராமப்புறங்களில் கிடைக்க கூடியது. அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், நாட்டுமருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sep 20, 2025

டை போடாமல் தலைமுடி கருப்பாக....

கொய்யா இலை10,5 செம்பருத்தி அரைத்து சாறு எடுத்து கடுகு வெந்தயம் பொன்னிறமாக வறுத்து தூளாக்கி இரண்டு ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடியை இரண்டு ஸ்பூன் கொய்யா சாற்றில் கலந்து தேவைக்கு நீரிட்டு ,நன்கு தடவி அரை மணி நேரம்ஊறவைத்து மாதத்தில் ஒரு முறை குளித்தாலே போதும் தலை முடி நன்கு கருப்பாக ஆகும், டை தேவையில்லை.

Sep 13, 2025

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பலாப்பழ கொட்டை.

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பலாப்பழ கொட்டையை  பயன்படுத்துங்கள். ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கி பலாப்பழ கொட்டையை பாலில் நன்கு ஊறவை வேண்டும். இவற்றுடன் தேன் சேர்த்து பேஸ்ட் போல் எடுத்து  முகத்தை நன்கு கழுவிய பின் இவற்றை முகத்தில் அப்ளை மசாஜ் பண்ணவும். வாரத்திற்கு ஒரு முறைஇப்படி செய்தால்சுருக்கம்நீங்கிபொழிவுகிடைக்கும்.பலாப்பழத்தில்வைட்டமின்ஏ, வைட்டமின்சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. 

Sep 12, 2025

கழுத்தை சுற்றியுள்ள கருமை நீங்க.....

சீரகத்தூள் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும் பருக்கள் இருந்த தடமும் நீங்கும். கற்றாழை ஜெல் மஞ்சள்தூள் சர்க்கரை பேக்கிங் சோடா ஆகியவற்றை கலந்து இந்த பேஸ்ட்டை கழுத்தை சுற்றி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் கழுத்தை சுற்றியுள்ள கருமை நீங்கும்.  காபி பொடி சர்க்கரை சேர்த்து தக்காளியில் தொட்டு முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவாக இருக்கும்.கோவக்காய் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

Sep 08, 2025

முந்திரி கழிவுகள் உடல் பருமனை எதிர்க்க உதவும்.

முந்திரி கழிவுகள் உடல் பருமனை எதிர்க்க உதவும் என ஜப்பானின் சுகுபா பல்கலை ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்." முந்திரிப் பழச்சாறு,ஓடு ஆகியவை, உடலில் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கின்றன. முந்திரிப் பழச்சாறு கொழுப்பு திரள்வதை குறைக்கிறது. முந்திரிப் பருப்பு சாற்றிலுள்ள அடிபோனெக்டின், ஆரோக்கியம் தரும் புரதத்தின் அளவை உயர்த்துகிறது.

Sep 06, 2025

பொடுகு பிரச்சனையை தீர்க்க....

வாழைப்பழம் எலுமிச்சை சாறு முட்டை வெள்ளை கரு ஆகியவற்றை கலந்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு சுத்தமாக இருக்காது முடி உதிர்வும் இருக்காது.கோவக்காய் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.ஆலிவ் ஆயில் தயிர் முட்டை வெள்ளை கரு எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் முடி வலுவாக இருக்கும் முடி உதிர்வும் குறைந்துவிடும்.வெந்தயத்தை அரைத்து அதனை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். அதேபோல, தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை கண்டிப்பாக நீங்கும்.  வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் தலையை அலசுங்கள். இதுபோன்ற எண்ணற்ற இயற்கை வழிகள் மூலம் உங்கள் பொடுகு பிரச்சனையை தீர்க்கலாம். 

Aug 30, 2025

கண்ணிற்கு கீழுள்ள கருமை நீங்க ஜெல்.

தேவையானவை1 டீஸ்பூன் ஆலோவேரா ஜெல்,அரை டீஸ்பூன் வெள்ளரி ஜூஸ்,ஒரு சிட்டிகை மஞ்சள் பௌடர்,ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர்,ஒரு சொட்டு ஆல்மண்ட் ஆயில்,மேற்கூறிய அனைத்தையும் ஒரு பௌலில் சேர்த்து ஜெல் பதம் வரும் வரைநன்கு கலக்கவும். இதை  ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம்.  தினமும் காலை மற்றும் மாலையில் கண்ணின் கீழ் தடவவும் பிறகு 15 நிமிடம் கழித்து கழுவவும்.ஒரே வாரத்தில் கருமை மறைந்து வீக்கம் இருந்தால் அதுவும் குறைந்து கண்கள் புத்துணர்ச்சியோடு சோர்வையும் போக்கும்.

Aug 25, 2025

சருமம் மென்மையாக கோதுமை மாவு .

சரும சுத்தம் மற்றும் பொலிவுக்கு கோதுமை மாவு, இயற்கையான ‘எக்ஸ்ஃபோலியேட்டராக’ செயல்பட்டு, முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் கலவைகளை நீக்குகிறது. இதனால், முகம் ஜொலிக்கத் தொடங்கும். முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தும்தொடர்ந்து பயன்படுத்தும்போது, கோதுமை மாவு முடி வேர்களை மெதுவாக பலவீனமாக்கி, அவற்றின் வளர்ச்சியை குறைக்கும்.  முகத்தில்உள்ளசிறுமுடிகளைஅகற்றுவதற்கு இது பயனாகிறது.பயன்பாட்டு முறைகள்:பேஸ்ட் 1: கோதுமை + தயிர்/பால் + மஞ்சள்தேவைப்படும் பொருட்கள்: கோதுமை மாவு – 2 ஸ்பூன் தயிர் அல்லது பால் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு செய்முறை:எல்லாவற்றையும் கலந்து விழுதாக செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்கவும். பின்னர் நனைந்த கைகளால் மெதுவாக துடைக்கவும்.பேஸ்ட் 2: கோதுமை + தேன்முடி வளரும் இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் காய வைக்கவும். பிறகு கீழிருந்து மேலாக மெதுவாக பிடுங்கி எடுக்கவும். ஸ்கிரப்: கோதுமை + கடலை மாவு + தயிர்/பால்இதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப் செய்து கழுவவும். இதுவும் பொலிவை கூட்டும். இந்த செய்முறைகள் வாரத்தில் 2-3 முறை பயன்படுத்தப்படும்போது, நல்ல முடிவுகளை காணலாம்.

Aug 18, 2025

தலை முடி கொட்டுவதை நிறுத்த....

3 ஸ்பூன் தயிரில் 1/4 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் சருமம் மென்மையாக இருக்கும் .வாழைப்பழம் பாதாம் பிசின் கலவையில்  நீங்கள் என்ன எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவீர்களோ அதை இரண்டு ஸ்பூன்  ஊற்றிக் கொண்டு. இதை மறுபடியும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் .இதை நம் தலையில் வேர்க்கால்களில் படும் படி தடவி20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் எப்போதும் போல ஷாம்பூ போட்டு நன்றாக சாதாரண நீரில் குளித்து விட வேண்டும். இதைவாரத்திற்கு இரண்டு முறை செய்தால் எப்படி வேகமாக கொட்டிய முடியும் தடைபடும்.

Aug 13, 2025

முகம் பளிச்சென மாற கடுக்காய் பொடி .

முகத்தில் இயற்கையான பொலிவை இழப்பதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன. தூய்மையில்லாத சுற்றுச்சூழல், அதிக சூரிய வெப்பம், குறைந்த தண்ணீர் உட்கொள்ளல், மற்றும் நன்றாக தூங்காமை போன்றவை முக சருமத்தில் கருமை ஏற்படச் செய்து பொலிவை குறைக்கும். இதனால் முதுமை தோற்றம் கூட வெளிப்படும். இந்தப் பிரச்சனையை சரி செய்ய, வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு எளிய ஃபேஸ் பேக் உள்ளது. அதில் முக்கியமான பொருள் கடுக்காய்.மருந்தாகவே பரவலாக பயன்படுத்தப்படும் கடுக்காயை, முக அழகுக்காகவும் பயன்படுத்தலாம் என்பது சற்று ஆச்சர்யமாக இருக்கலாம். கடுக்காய் பொடி, முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து, கண்கள் மற்றும் வாயை சுற்றியுள்ள கருமையைக் குறைக்கும் திறன் கொண்டது. செய்முறை:மூன்று ஸ்பூன் கடுக்காய் பொடி, இரண்டு விட்டமின் E எண்ணெய் கேப்சூல்கள், அரை ஸ்பூன் தேன் மற்றும் தேவையான அளவு பன்னீர்—all சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதை முகம் மற்றும் கழுத்தில் கீழிருந்து மேலாக தடவி, 20 நிமிடங்கள் வைத்துவிட்டு மெதுவாக தேய்த்து கழுவ வேண்டும்.மேலும், நேரத்தை மிச்சப்படுத்த கடுக்காய் ஹேர் பேக் தயாரிக்கவும்: கடுக்காய், ஆம்லா, கருவேப்பிலை பொடிகள் ஒவ்வொன்றாக 1–2 ஸ்பூன் வீதம் எடுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து இரவில் ஊறவைத்து, காலையில் தலைமுடியில் தேய்க்கவும். வாரத்தில் ஒருமுறை செய்தால் முடி வளர்ச்சியும், பொடுகும் கட்டுப்படும்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 27 28

AD's



More News