25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் 111 பயனாளிகளுக்கு இணைய வழி பட்டாக்களை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 111 பயனாளிகளுக்கு இணைய வழி பட்டாக்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் கீழதிருத்தங்கல், விருதுநகர் வட்டம் சின்னவாடி மற்றும் மெட்டுக்குண்டு, காரியாபட்டி வட்டம் கம்பிக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 111 பயனாளிகளுக்கு இணைய வழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா I A S., அவர்கள் (12.09.2026) வழங்கினார்.தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், வெளிப்படையாகவும், எளிதாகவும் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான சேவைகளை எளிதாகப் பெறும் வகையில் வருவாய்த்துறையின் பல்வேறு சேவைகள் இணைய வழியில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தகுதியான பயனாளிகளுக்கு இணைய வழியில் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த 30 பயனாளிகளுக்கும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சின்னவாடி கிராமத்தைச் சேர்ந்த 23 பயனாளிகளுக்கும், மெட்டுக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கும், காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி கிராமத்தைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கும் என மொத்தம் 111 பயனாளிகளுக்கு இணைய வழி பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு நேரடியாக பலமுறை சென்று காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், நில உரிமை தொடர்பான ஆவணங்களை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுகிறது.

மேலும், இணைய வழி பட்டா வழங்கும் நடைமுறையின் மூலம் சேவைகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுவதோடு, பொதுமக்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் விரைவாக தீர்வு காணப்படுகிறது என தெரிவித்தார்.இணைய வழி பட்டாக்களைப் பெற்ற பயனாளிகள், தங்களது நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும், நில உரிமையை உறுதி செய்யும் முக்கிய ஆவணமான பட்டா தங்களுக்கு எளிமையான முறையில் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, தகுதியான பயனாளிகளுக்கு விரைவாக பட்டாக்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டமாவட்டநிர்வாகத்திற்கும்,தமிழ்நாடுஅரசுக்கும்பயனாளிகள்தங்களதுநன்றியைத்.தெரிவித்துக்கொண்டனர்இந்நிகழ்வின் போது, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்ஃபான், I A S., வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News