25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெள்ளை முடி கருப்பாக...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெள்ளை முடி கருப்பாக...

.வெள்ளை முடிகருப்பாக வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான வைத்தியங்கள்.மோசமான உணவு, அதிகப்படியான காபி, டீ, மரபணு போன்ற காரணங்களால் நரை முடி ஏற்படுகிறது.தலை முடி நரைப்பதை தடுக்க,பாதாமில் கேடலேஸ் என்ற என்சைம் உள்ளது, இது தலை முடி நரைப்பதை தடுக்கிறது. இது தவிர, பாதாமில் இருக்கும் காப்பர், மெலனினை உற்பத்தி செய்கிறது, இதனால் வெள்ளை முடி வராது. பாதாம் தலை முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். 

பாதாம் சாறு தயாரிக்கும் முறை

பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.மறுநாள் காலை அதை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டை வடிகட்டி சாறை மட்டும்· தனியாக எடுத்துக்கொள்ளவும்.உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசவும்.அதன் பிறகு வடிக்கட்டிய பாதாம் சாறை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியில் தடவி மாற்றத்தை பார்க்கவும்.

 BLACK COFFEE தயாரிக்கும் முறை

கருப்பு காபியைவெள்ளை முடி பிரச்சனைக்கும் பயன்படுத்தலாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து.அதில்4-,5 டீஸ்பூன் காபி தூளை சேர்க்கவும். பின்னர் ஆற வைக்கவும்.இந்த கருப்பு காபியை உங்கள் தலைமுடியில் தடவவும்.சுமார் அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசவும். உங்கள் தலைமுடி கருப்பாக மாறும். .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News