25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


அழகுக் குறிப்பு

Mar 28, 2026

நரை முடி மாற ஹேர் டை…

 பீட்ரூட், சிவப்பு செம்பருத்தி 10, கறிவேப்பிலை கப், இவற்றை கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.ஒரு இரும்பு கடாயில் 200மிலி 'தண்ணீர் விட்டு அதனுடன் 3 ஸ்பூன் காபி தூளை போட்டு மிதமாக சூடேற்றி, அதில் முன்பே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து, 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பின் 12 மணி நேரத்திற்கு ஆறவிடவும்மறுநாள் காலை ஆறவைத்த ஹேர் டையுடன் 1ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்துங்கள்.வாரத்தில் ஒருநாள்  இந்த ஹேர் டை பயன்படுத்தினால் நரை முடி மாறும். இந்த ஹேர் டை 12 மணி நேரம் ஆறவைக்க வேண்டுமென்பதால் இரவில் தயாரிப்பது சிறந்தது.

Mar 24, 2026

இயற்கை அழகு தரும் காய், கனி, தழைகள்.

முக சுருக்கத்தை போக்கும் கேரட்.முக பொலிவை தரும் பீட்ரூட்..சரும வறட்சிக்கு உருளைக்கிழங்கு.கருவளையத்தை போக்கும் வெள்ளரி.பொடுகை போக்கும் எலுமிச்சை.நரை முடியை போக்கும் நெல்லிக்காய்.முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி தழை.உதட்டில் உள்ள கருமையை போக்கும் புதினா இலை.தலை முடியை கருமையாக்கும் கருவேப்பிலை தழை.முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள் .வசீகர அழகுக்கு ஆரஞ்சு.தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை.

Mar 17, 2026

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க....

பப்பாளிப்பழத்தை மிக்சியில் அரைத்து. அத்துடன் முல்தானி மட்டி மற்றும் வேப்பிலைப் பொடி சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறைந்து, முகம் பளபளப்பாகும்.சோள மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து,முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவலாம். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்னை உள்ளவர்கள், வெயிலில் சென்று, வீட்டிற்கு திரும்பியதும், சிறிது தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், அதிகப்படியான எண்ணெய் வழிவது குறைந்து, முகம் பளபளப்பாகும்.

Mar 10, 2026

சின்னம்மையால் ஏற்பட்ட வடுவைப் போக்க,…

சின்னம்மையால் ஏற்பட்ட வடுவைப் போக்க, தேங்காய் தண்ணீர் பயன்படுகிறது. தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து, ஆறு மாதம் பூசி வர,வடு மறையும்.பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் பூசி வர, சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

Mar 03, 2026

முழங்கை கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால்....

 முழங்கை கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பூசி வந்தால் மிருதுவாக மாறும். வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.

Feb 24, 2026

பருக்கள், கரும்புள்ளிகளும் மறைய…

ஒரு கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்துமல்லி இலை ஆகியவற்றை ஒன்று சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் உள்ள பருக்களில் பூசி வந்தால், பருக்கள் மறைவதோடு, பருக்கள் ஏற்படுத்திய கரும்புள்ளிகளும் மறையும்.

Feb 10, 2026

குழந்தையின் நிறத்தினை மேம்படுத்த ...

200 கிராம் பச்சை பயிறு. 100 கிராம் கடலை மாவு .50 கிராம் ரோஜா இதழ் பொடி .50 கிராம். ஆரஞ்சு தோல் பொடி. 10 கிராம் பூலாங்கிழங்கு பொடி. 10 கிராம் பாதம் பருப்பு பொடி.இவற்றினை எல்லாம் ஒன்று சேர்த்து நன்கு மாவாக அரைத்து ஜலித்து எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த கலவையை குளிக்கும் பொழுது பயன்படுத்தினால் எந்தவிதமான பிரச்சனையும் வராது. இந்த கலவையானது குழந்தையின் தோல் நிறத்தினை மாற்ற உதவுகிறது.

Feb 07, 2026

நரை விழுவதை தடுக்க....

 முடக்கத்தான் கீரையை வாரம் ஒரு முறை  அரைத்து தலையில் தேய்த்து5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும்.முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்.

Feb 03, 2026

கூந்தல் உதிர்வு நின்று, அடர்த்தியாக வளர....

ஆவாரம்பூ10 கிராம், வெந்தயம்100 கிராம், பயத்தம் பருப்பு1/2 கிலோ, இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.இந்தப் பவுடரை குளிப்பதற்கு முன், வெந்நீரில் கரைத்து,15 நிமிடங்கள் ஊற வைத்த பின் அந்தப் பேஸ்ட்டை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நின்றுவிடும்.முடி நல்ல அடர்த்தியாக சில்க்கி ஆக மாறுவது கண்கூடாக காணலாம்.

Jan 26, 2026

பொலிவிழந்த சருமத்திற்கு நெய் ஃபேஸ்பேக்.

2 ஸ்பூன் ஆப்பிள் சாறுடன் சிறிது தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விட ,பொலிவிழந்த சருமம் கண்ணாடி போல் பளபளக்கும்.நெய் ஃபேஸ்பேக் சந்தனம் 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், அத்துடன் நெய்  சிறிது சேர்த்து நன்கு  குழைத்து,முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து ,வெதுவெதுப்பான நீரில் கழுவி விட முகத்திற்கு உடனடி பொலிவையும் தரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 27 28

AD's



More News