காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும்.முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வர முடி வளரும்.பூசனிக்கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து சாறு எடுத்து கசக்கி சாறுஎடுத்து தலையில் தடவி வர சொட்டையில் முடிமுளைக்கும்.
அன்னாசி பழத்தைக் கடித்து சாப்பிட, அதில் உள்ள 'bromelain' பற்களை வெண்மையாக்கும்."சார்கோல் பவுடரால்" வாரம் இருமுறை பல் தேய்க்க வேண்டும்.சாக்லேட், சர்க்கரை, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஆயில் புல்லிங், வாழைப்பழத் தோலால் பற்களில் மசாஜ் செய்வது நல்லது.(தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் இதைச் செய்யலாம்)எலுமிச்சை தோலால் பல தேயக்க பற்கள் சுத்தமாகும்.உப்பு கொண்டும் பல் தேய்க்க வேண்டும்.
உருளைக்கிழங்கை மெல்லிய வில்லைகளாக நறுக்கி கண்ணுக்கு கீழ் பகுதியில் சிறிது நேரம் வைத்து கழுவி விடலாம் அல்லது உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் அடித்து கண்ணுக்கு கீழ் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கருவளையம் நீங்கி விடும்.
தங்க பஸ்பம் என்று சொல்லப்படும் இதை உள்ளுக்குள் எடுப்பதன் மூலம் பலவிதமான மருத்துவ குணங்களை பெறலாம். பூ, இலை இரண்டுமே சருமத்துக்கும், கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.முழுமையான செம்பருத்தி பூவை காய வைத்து பொடித்து கொள்ளவும்.செம்பருத்திபூ பொடி_3 ஸ்பூன், பாசி பயறு மாவு__3 ஸ்பூன், பால் தேவைக்கு.இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி ஈரப்பதம் சீராக இருக்கும் சருமம் புத்துணர்ச்சியுடனும், முகத்தில் தனி அழகும் இருக்கும்.
கோடை காலங்களில் வியர்வை துர்நாற்றம் பொது இடங்களுக்குச் செல்ல சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு நலங்கு மாவு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நறுமணத்தை ஏற்படுத்தும் பல மூலிகைகளை சேர்த்து அரைத்து உபயோகிப்பதால் புத்துணர்வை தந்து சருமத்தையும் பாதுகாக்கிறது. முகப்பருக்கள் குறைவதுடன் நாளடைவில் மறைந்து போகும். இது காய்ந்த ரோஜா, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு, கார் போக அரிசி, முல்தானி மெட்டி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, புலாங்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்த இந்த நலுங்கு மாவை குளிப்பதற்கு முன் உடல் முழுவதும்தேய்த்து குளித்தால் தொற்றுக்களை தடுத்து உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.
நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால், துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டு வந்தால், விரைவில், நகத்தின் கருமை மறையும்.
எல்லோருக்கும் இளமையாகத் திகழ வேண்டும் என்பது ஒரு சாதாரண விருப்பமாகும். சிலர் தோல் சுருங்கி முதுமை தோன்றக் கூடாது என நினைக்க, சிலர் உடல் வலிமை குறையாமல் இருக்க வேண்டும் என முயற்சிக்கிறார்கள். முதுமையை முழுவதுமாகத் தவிர்க்க முடியாது, உடலளவில் சுறுசுறுப்பாக இருக்கவும், சருமத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கவும் சில வழிகள் உதவலாம்.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கப்படும5-6 பாதாம், 2 வால்நட் போன்ற பருப்புகளை காலை உணவில் சேர்த்துக் கொள்வது, சருமத்திற்குத் தேவையான கொழுப்புக்களைவழங்கும். இரவில் படுக்கும் முன், 5 சொட்டு ஆளிவிதை எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, இளமையாகத் தோன்றஉதவும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்கும் பழக்கத்தை உட்படுத்தவும். உடலில் தேவையான நீர்ச்சத்தைக் குறைக்காமல் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் நச்சுகளை வெளியேற்றலாம். சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தால், முதுமையிலும் இளமையாக தோன்ற முடியும்!
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவிடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
அறுகம்புல், கஸ்தூரி மஞ்சள், மருதாணி இலை இம்மூன்றையும் அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் குணமாகும்.வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் தேமல் மறையும். வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம்.வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து, தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.