25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


அழகுக் குறிப்பு

Apr 04, 2026

முகத்தில் அம்மை வடு தழும்பு நீங்க, 

கருவேப்பிலை ஒரு கப்பிடி, கசகசா ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு வற்றைத் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் பூசவும். 30 நிமிடங்கள் இத்து முகம் கழுவ, தழும்பு குறையும். வடு மறையும் வரை தொடரவும்.

Mar 31, 2026

ஆரோக்கியமான முடிக்கான சிறந்த உணவுகள்!

அடர்த்தியான முடி - Pumpkin seedsமுடி வளர்ச்சி முட்டை.வலுவான முடி வால்நட்.வெண்ணெய் பளபளப்பான முடி.முடி உதிர்வு குறைக்க - பசலைக்கீரை,பொடுகு குறைக்க - தயிர்.Scalp ஈரப்பதம் - தேங்காய் எண்ணெய்.வேகமான வளர்ச்சி சால்மன்.முடி உதிர்வு குறைக்க - சக்கரைவள்ளிக்கிழங்கு.Scalp ஆரோக்கியம் -  Green tea.Damage repair - பாதாம்.Hair follider வலுப்படுத்த Flax seeds.மொந்த முடி ஆரோக்கியம் பருப்பு வகைகள்.உணவு சரியா இருந்தா,இயற்கையாக வலிமையானது.

Mar 28, 2026

நரை முடி மாற ஹேர் டை…

 பீட்ரூட், சிவப்பு செம்பருத்தி 10, கறிவேப்பிலை கப், இவற்றை கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.ஒரு இரும்பு கடாயில் 200மிலி 'தண்ணீர் விட்டு அதனுடன் 3 ஸ்பூன் காபி தூளை போட்டு மிதமாக சூடேற்றி, அதில் முன்பே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து, 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பின் 12 மணி நேரத்திற்கு ஆறவிடவும்மறுநாள் காலை ஆறவைத்த ஹேர் டையுடன் 1ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்துங்கள்.வாரத்தில் ஒருநாள்  இந்த ஹேர் டை பயன்படுத்தினால் நரை முடி மாறும். இந்த ஹேர் டை 12 மணி நேரம் ஆறவைக்க வேண்டுமென்பதால் இரவில் தயாரிப்பது சிறந்தது.

Mar 24, 2026

இயற்கை அழகு தரும் காய், கனி, தழைகள்.

முக சுருக்கத்தை போக்கும் கேரட்.முக பொலிவை தரும் பீட்ரூட்..சரும வறட்சிக்கு உருளைக்கிழங்கு.கருவளையத்தை போக்கும் வெள்ளரி.பொடுகை போக்கும் எலுமிச்சை.நரை முடியை போக்கும் நெல்லிக்காய்.முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி தழை.உதட்டில் உள்ள கருமையை போக்கும் புதினா இலை.தலை முடியை கருமையாக்கும் கருவேப்பிலை தழை.முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள் .வசீகர அழகுக்கு ஆரஞ்சு.தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை.

Mar 17, 2026

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க....

பப்பாளிப்பழத்தை மிக்சியில் அரைத்து. அத்துடன் முல்தானி மட்டி மற்றும் வேப்பிலைப் பொடி சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறைந்து, முகம் பளபளப்பாகும்.சோள மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து,முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவலாம். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்னை உள்ளவர்கள், வெயிலில் சென்று, வீட்டிற்கு திரும்பியதும், சிறிது தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், அதிகப்படியான எண்ணெய் வழிவது குறைந்து, முகம் பளபளப்பாகும்.

Mar 10, 2026

சின்னம்மையால் ஏற்பட்ட வடுவைப் போக்க,…

சின்னம்மையால் ஏற்பட்ட வடுவைப் போக்க, தேங்காய் தண்ணீர் பயன்படுகிறது. தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து, ஆறு மாதம் பூசி வர,வடு மறையும்.பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் பூசி வர, சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

Mar 03, 2026

முழங்கை கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால்....

 முழங்கை கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பூசி வந்தால் மிருதுவாக மாறும். வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.

Feb 24, 2026

பருக்கள், கரும்புள்ளிகளும் மறைய…

ஒரு கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்துமல்லி இலை ஆகியவற்றை ஒன்று சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் உள்ள பருக்களில் பூசி வந்தால், பருக்கள் மறைவதோடு, பருக்கள் ஏற்படுத்திய கரும்புள்ளிகளும் மறையும்.

Feb 10, 2026

குழந்தையின் நிறத்தினை மேம்படுத்த ...

200 கிராம் பச்சை பயிறு. 100 கிராம் கடலை மாவு .50 கிராம் ரோஜா இதழ் பொடி .50 கிராம். ஆரஞ்சு தோல் பொடி. 10 கிராம் பூலாங்கிழங்கு பொடி. 10 கிராம் பாதம் பருப்பு பொடி.இவற்றினை எல்லாம் ஒன்று சேர்த்து நன்கு மாவாக அரைத்து ஜலித்து எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த கலவையை குளிக்கும் பொழுது பயன்படுத்தினால் எந்தவிதமான பிரச்சனையும் வராது. இந்த கலவையானது குழந்தையின் தோல் நிறத்தினை மாற்ற உதவுகிறது.

Feb 07, 2026

நரை விழுவதை தடுக்க....

 முடக்கத்தான் கீரையை வாரம் ஒரு முறை  அரைத்து தலையில் தேய்த்து5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும்.முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 26 27

AD's