விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் SSC Combined Gradual Level (CGL) CBT -1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, மற்றும் SSC & RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அலுவலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் Wifi வசதியுடன் கணினி ஆய்வகம் உள்ளது.
இலவசப் பயிற்சி வகுப்பு விவரம்:
தேர்வு: பணியாளர் தேர்வு வாரியத்தின் *SSC Combined Graduate Level (CGL) - CBT 1* தேர்வு.
தொடக்க நாள்: *10.06.2026 (புதன்கிழமை)* முதல் தினசரி வகுப்புகள் நடைபெறும்.
இடம்: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகம்.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:
திறன் வாய்ந்த சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
இலவச பாடவாரியான தேர்வுகள் (Topic-wise Tests) மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் (Full Mock Tests) தொடர்ச்சியாக நடத்தப்படும்.
பதிவு செய்யும் முறை:
இவ்வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள் கீழே உள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்:
1. மின்னஞ்சல் வழியாக: studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.
2. நேரடிப் பதிவு: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு *நேரடியாகச் சென்று* தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
எனவே SSC Combined Gradual Level (CGL) தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply