காமன்வெல்த் கபடி: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி முதலிடம்.
அகமதாபாத்தில் முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.
ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் ஏற்கனவே விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இந்திய அணி 27-9 என வலுவான முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 45-24 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை வீழ்த்தியது. இதன் மூலம் 'ஏ' பிரிவில் தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.
0
Leave a Reply