உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மணிஷா; தானு சர்மாவுக்கு வெண்கலம்.
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான 59 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் மணிஷா பங்கேற்றார்.
காலிறுதிப் போட்டியில் 6-0 என மங்கோலியாவின் போலார்டுயாவை வீழ்த்திய மணிஷா, அரையிறுதியில் கஜகஸ்தானின் ஆல்டின் ஷகயேவாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மணிஷா 10-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
தானு சர்மாவுக்கு வெண்கலம்:
பெண்களுக்கான 72 கிலோ பிரிவில் உலக 20 வயதிற்குட்பட்டோர் சாம்பியனான இந்தியாவின் தானு சர்மா, அமெரிக்காவின் ரோசன்னா பெல்லை எதிர்கொண்டார். இதில் 9-5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தானு சர்மா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
0
Leave a Reply