அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி இந்தியா வருகிறார்.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது.இதையடுத்து, இந்தியாவில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி பங்கேற்கும் 'நட்பு' போட்டிக்கு, கேரளா மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைசியில் இப்போட்டி ரத்தானது.
மூன்று நாள் பயணமாக'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, டிசம்பர் 13 அதிகாலை 1:30 மணிக்கு இந்தியா வருகிறார். அர்ஜென்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் ,இவரது நீண்ட கால கிளப் அணி நண்பர்உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், என மூன்று பேர் வருகின்றனர்.
கோல்கட்டா, இ.எம் பைபாஸில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் காலை 9:30 முதல் 10:30 மணி வரை ஸ்பான்சர் சந்திப்பு நடக்கிறது.பின் இந்தியா-அர் ஜென்டினா உணவுத்திருவிழா நடக்கிறது.அடுத்து தனது ஆளுயர சிலையை திறந்து வைக்கிறார்.பின் சால்ட் லேக் மைதானத்தில், மெஸ்ஸிக்கு ஓவியம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதில் 70,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரள உள்ளனர். மூன்றாவது நாள் டிசம்பர் 15, டில்லி செல்லும் மெஸ்ஸி, மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.
0
Leave a Reply