ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனா, வங்கதேசத்தை வென்று இந்தியா வெற்றி பெற்றது.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மற்றும் மொகாலியில் 9-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, தற்போது தொடர்ச்சியாக 2-வது வெற்றியைப் பதிவு செய்து 6 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி தனது 3-வது லீக் போட்டியில் இன்று ஜப்பானை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply