இந்தியா ஆசிய துப்பாக்கி சுடுதலில் 31 பதக்கங்கள் வென்றது. ஒட்டுமொத்தமாக (சீனியர், ஜூனியர், யூத்) போட்டியில் 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என, 103 பதக்கம் வென்றது இந்தியா.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்' பிரிவில் ராஜ்கன்வர் சிங் சாந்து (583.22 புள்ளி),குர்பிரீத் சிங் (579.17), அங்குர் கோயல் (571.18) அடங்கிய இந்திய அணி, 1733.57 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் தனிநபர் பிரிவில் ராஜ்கன்வர் சிங் சாந்து தங்கம் வென்றார்.
இந்தியாவின் அங்கூர் மிட்டல் ஆண்களுக்கான 'டபுள் டிராப்' பிரிவில் தங்கம் வென்றார். அனுஷ்கா (93 புள்ளி), பிரனில் (89), ஹபிஸ் (87) அடங்கிய இந்திய அணி பெண்கள் அணிகளுக்கான டிராப்' பிரிவில் தங்கத்தை கைப்பற்றியது. தனிநபர் பிரிவில் 'டாப்-3' இடம் பிடித்த இவர்கள் பதக்கம் வென்றனர்.
50 மீ., 'ரைபிள் 'புரோன்' பெண்களுக்கான தனி நபர் பிரிவில் இந்தியாவின் மணினி கவுசிக், 617.8 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். இதன் அணிகள் பிரிவில் மணினி கவுசிக் (617.8), சுரபி பரத்வாஜ் ரபோல் (614.4), வினோத் விதர்சா (613.8) அடங் கிய இந்திய அணி, 1846.0 புள்ளிகளுடன் வெள்ளிப்ப தக்கத்தை கைப்பற்றியது.
சீனியர் பிரிவில் 14 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என, 31 பதக்கம் வென்ற இந்தியா 2வது இடம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக (சீனியர், ஜூனியர், யூத்) 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என, 103 பதக்கம் வென்றது இந்தியா.
0
Leave a Reply