குடமிளகாய் பனீர் மசாலா
தேவையான பொருட்கள் : குடமிளகாய் 2. பனீர் - 200 கிராம், பெரிய வெங்காயம் - 1, தக்காளி -2, சாட் மசாலா - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச்சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: குடமிளகாய், பனீர், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சதுர துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பனீர், தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி சாட்மசாலா, எலுமிச்சம்பழச் சாறு சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.சாலட் வகைகள், புலாவ், சப்பாத்தி, புரோட்டாவுடன் சாப்பிட ஏற்ற மசாலா இது.
0
Leave a Reply